| 1 | அம்மோனியரைக் குறித்து, ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேலுக்குப் புதல்வரே இல்லையா? அதற்கு வழிமரபே கிடையாதா? மில்க்கோம் காத்தைக் கைப்பற்றியது ஏன்? அவன் மக்கள் அதன் நகர்களில் குடியிருப்பது ஏன்? | எரே 49:7 எரே 49:23 எரே 49:28 எரே 48:1 |
| 2 | இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அம்மோனியரின் இராபாவுக்கு எதிராகப் போர்முரசு ஒலிக்கச் செய்வேன். அது பாழடைந்த குவியல் ஆகும்: அதன் ஊர்கள் தீக்கிரையாகும்: தன்னைக் கைப்பற்றியோரை இஸ்ரயேல் கைப்பற்றிக் கொள்ளும், என்கிறார் ஆண்டவர். | எரே 4:19 எசே 25:4-6 ஆமோ 1:14 |
| 3 | எஸ்போனே, புலம்பியழு: ஆயி பாழடைந்துவிட்டது. இராபாவின் புதல்வியரே ஓலமிடுங்கள்: சாக்கு உடை உடுத்திக்கொள்ளுங்கள்: ஒப்பாரி வையுங்கள்: மதில்களுக்கிடையே அங்குமிங்கும் ஓடுங்கள்: மில்கோம் நாடுகடத்தப்படுவான். அவன் அர்ச்சகர்களும் தலைவர்களும் அவனோடு செல்வார்கள். | எரே 48:20 எரே 51:8 ஏசா 13:6 ஏசா 14:31 ஏசா 15:2 ஏசா 16:7 ஏசா 23:1 ஏசா 23:6 யாக் 5:1 |
| 4 | பற்றுறுதியற்ற மகளே, உன் பள்ளத்தாக்குகள் பற்றி, உன் செழிப்பான பள்ளத்தாக்குகள் பற்றி, பெருமையடிப்பானேன்? உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்கிறாய்: 'எனக்கு எதிராய் எவன் வருவான்?' எனச் சொல்லிக்கொள்கின்றாய். | எரே 9:23 ஏசா 28:1-4 ஏசா 47:7 ஏசா 47:8 வெளிப் 18:7 |
| 5 | உன்னைச் சுற்றியிருப்போர் அனைவரிடமிருந்தும் உனக்குத் திகில் வருவிப்பேன், என்கிறார் படைகளின் ஆண்டவராகிய தலைவர். நீங்கள் எல்லாரும் தலை தெறிக்க ஓடுமாறு விரட்டியடிக்கப்படுவீர்கள்: தப்பியோடுவோரை ஒன்று சேர்க்க எவரும் இரார். | எரே 49:29 எரே 15:8 எரே 20:4 எரே 48:41-44 யோசு 2:9 2இரா 7:6 2இரா 7:7 2இரா 19:7 யோபு 15:21 நீதி 28:1 |
| 6 | பின்னர், அம்மோனியரின் சொத்து, செல்வங்களைத் திரும்பக் கொடுப்பேன், என்கிறார் ஆண்டவர். | எரே 49:39 எரே 46:26 எரே 48:47 ஏசா 19:18-23 ஏசா 23:18 எசே 16:53 |
| 7 | ஏதோமைக் குறித்து, படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: தேமானில் ஞானம் அற்றுப்போயிற்றா? மதி நுட்பமுடையோரிடமிருந்து அறிவுரை ஒழிந்துபோயிற்றா? அவர்களின் ஞானம் மறைந்து போயிற்றா? | எரே 25:9 எரே 25:21 ஆதி 25:30 ஆதி 27:41 ஆதி 36:8 எண் 20:14-21 எண் 24:17 எண் 24:18 உபா 23:7 சங் 83:4-10 சங் 137:7 ஏசா 34:1-17 ஏசா 63:1-6 எசே 25:12-14 எசே 35:1-15 தானி 11:41 யோவே 3:19 ஆமோ 1:11 ஆமோ 1:12 ஒபதி 1:1-9 மல்கி 1:3 மல்கி 1:4 |
| 8 | தெதோன் குடிமக்களே, திரும்புங்கள், தப்பியோடுங்கள்: பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்: நான் ஏசாவைத் தண்டிக்கும் அவனது காலத்தில் அழிவை அவன்மீது கொண்டுவருவேன். | எரே 49:30 எரே 6:1 எரே 48:6 மத் 24:15-18 வெளிப் 6:15 |
| 9 | திராட்சைப் பழம் பறிப்போர் உன்னிடம் வந்தால், விடுபட்ட பழங்கள் எஞ்சியிராவோ? இரவில் திருடர் வருவாராயின், தேவைக்குமேல் திருடமாட்டார் அன்றோ? | ஏசா 17:6 ஒபதி 1:5 ஒபதி 1:6 |
| 10 | நானோ ஏசாவை வெறுமையாக்கிவிட்டேன்: அவனுடைய பதுங்கிடங்களை வெளிப்படுத்திவிட்டேன். இனி அவனால் மறைந்திருக்க முடியாது. அவன் வழிமரபினர், சகோதரர், அடுத்திருப்பார் அழிக்கப்படுவர்: அவன் முற்றிலும் அழிந்து போவான். | மல்கி 1:3 மல்கி 1:4 ரோம 9:13 |
| 11 | அனாதைகளைப்பற்றிக் கவலை கொள்ளாதே. நான் அவர்களை வாழவைப்பேன். உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும். | உபா 10:18 சங் 10:14-18 சங் 68:5 சங் 82:3 சங் 146:9 நீதி 23:10 நீதி 23:11 ஓசி 14:3 யோனா 4:11 மல்கி 3:5 யாக் 1:27 |
| 12 | ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நியாயப்படி துன்பக்கலத்தில் குடிக்கத் தேவையில்லாதவர்களே குடிக்கவேண்டியிருந்தது என்றால், நீ எவ்வாறு தண்டனைக்குத் தப்பமுடியும்? இல்லை, நீ தண்டனை பெறாது போகமாட்டாய்: நீ துன்பக்கலத்தில் குடித்தே தீருவாய். | எரே 25:28 எரே 25:29 எரே 30:11 எரே 46:27 நீதி 17:5 புலம் 4:21 புலம் 4:22 ஒபதி 1:16 1பேது 4:17 1பேது 4:18 |
| 13 | ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: என்மேல் ஆணை! பேரச்சம், கண்டனம், அழிவு, பழிப்பு ஆகியவற்றுக்குப் போஸ்ரா ஆளாகும்: அதன் நகர்கள் அனைத்தும் என்றென்றும் பாழாய்க் கிடக்கும். | எரே 44:26 ஆதி 22:16 ஏசா 45:23 எசே 35:11 ஆமோ 6:8 |
| 14 | நான் ஆண்டவரிடமிருந்து ஒரு செய்தி கேட்டேன். “ஒன்றுகூடுங்கள், அதனை எதிர்க்க வாருங்கள், போருக்குப் புறப்படுங்கள்” என்று சொல்லுமாறு, மக்களினத்தார்க்கு ஒரு தூதன் அனுப்பப்பட்டுள்ளான். | எரே 51:46 ஏசா 37:7 எசே 7:25 எசே 7:26 ஒபதி 1:1 மத் 24:6 |
| 15 | பார்! மக்களினத்தாருள் உன்னைச் சிறியதாய் ஆக்குவேன்: மாந்தர்தம் இகழ்ச்சிக்கு நீ ஆளாவாய். | 1சாமு 2:7 1சாமு 2:8 1சாமு 2:30 சங் 53:5 ஒபதி 1:2 மீகா 7:10 லூக் 1:51 |
| 16 | பாறை இடுக்குகளில் வாழ்பவனே, குன்றின் உச்சியைப் பிடித்திருப்பவனே, நீ விளைவித்த அச்சமும் உன் உள்ளத்தின் இறுமாப்பும் உன்னை ஏமாற்றிவிட்டன: நீ கழுகைப் போல் உன் கூட்டை உயரத்தில் கட்டினாலும், நான் உன்னை அங்கிருந்து கீழே தள்ளிவிடுவேன், என்கிறார் ஆண்டவர். | எரே 48:29 நீதி 16:18 நீதி 18:21 நீதி 29:23 ஏசா 25:4 ஏசா 25:5 ஏசா 49:25 ஒபதி 1:3 |
| 17 | ஏதோம் பேரச்சம் தரக்கூடியதாய் மாறும். அதன் வழியே போகிறவன் எவனும் அதிர்ச்சியடைவான்: அதன் அழிவு கண்டு ஏளனம் செய்வான். | எரே 49:13 ஏசா 34:9-15 எசே 25:13 எசே 35:7 எசே 35:15 |
| 18 | சோதோம், கொமோராவும் அவற்றின் அண்டை நகர்களும் வீழ்த்தப்பட்டபொழுது நிகழ்ந்ததுபோல், ஏதோமில் ஒருவனும் குடியிருக்கமாட்டான்: எவனும் தங்கமாட்டான், என்கிறார் ஆண்டவர். | எரே 50:40 ஆதி 19:24 ஆதி 19:25 உபா 29:23 சங் 11:6 ஏசா 13:19-22 ஆமோ 4:11 செப் 2:9 2பேது 2:6 யூதா 1:7 |
| 19 | யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவது போல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென விரட்டியடிப்பேன்: நான் தேர்ந்துகொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக் கேட்பவன் யார்? எந்தத் தலைவன் என்னை எதிர்த்து நிற்பான்? | எரே 4:7 எரே 50:44-46 சகரி 11:3 |
| 20 | எனவே ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், தேமானின் குடிகளுக்கு எதிராக அவர் எடுத்துள்ள முடிவுகளுக்கும் செவிகொடுங்கள்: மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்: ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும். | எரே 50:45 சங் 33:11 நீதி 19:21 ஏசா 14:24-27 ஏசா 46:10 ஏசா 46:11 அப் 4:28 எபே 1:11 |
| 21 | அவர்களுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்: அவர்களின் கூக்குரல் செங்கடல் வரை கேட்கும். | எரே 50:46 ஏசா 14:4-15 எசே 26:15-18 எசே 21:16 எசே 32:10 வெளிப் 18:10 |
| 22 | இதோ! கழுகைப் போல் ஒருவன் வானளாவப் பறந்து, கீழ்நோக்கிப் பாய்வான்: போஸ்ரா மேல் தன் இறக்கைகளை விரிப்பான். அந்நாளில் ஏதோமின் படைவீர்களுடைய இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும். | எரே 4:13 எரே 48:40 எரே 48:41 உபா 28:49 தானி 7:4 ஓசி 8:1 |
| 23 | தமஸ்கு குறித்து: ஆமாத்தும் அர்ப்பாதும் கலக்கம் அடைந்துள்ளன: கெட்ட செய்தியை அவை கேள்வியுற்றன: அவை அச்சத்தால் நடுங்குகின்றன: கடலைப்போல் தத்தளிக்கின்றன: அவற்றுக்கு அமைதியே கிடையாது. | ஆதி 14:15 ஆதி 15:2 1இரா 11:24 ஏசா 17:1-3 ஏசா 37:13 ஆமோ 1:3-5 சகரி 9:1 சகரி 9:2 2கொரி 11:32 |
| 24 | தமஸ்கு தளர்ந்துவிட்டது: தப்பியோடப் பார்க்கின்றது: அதனைக் கிலி பிடித்துக்கொண்டது: வேதனை, துயரத்தின் பிடியில் பேறுகாலப் பெண் தவிப்பதுபோல் அதுவும் தவிக்கின்றது. |
| 25 | புகழ் பெற்ற நகர் - மகிழ்ச்சி பொங்கும் நகர் - இப்படிக் கைவிடப்பட்டுக் கிடக்கிறதே! | எரே 33:9 எரே 48:2 எரே 48:39 எரே 51:41 சங் 37:35 சங் 37:36 ஏசா 1:26 ஏசா 14:4-6 தானி 4:30 வெளிப் 18:10 வெளிப் 18:16-19 |
| 26 | அதன் இளைஞர்கள் தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள். அதன் படைவீரர்கள் அனைவரும் அந்நாளில் அழிக்கப்படுவார்கள், என்கிறார் படைகளின் ஆண்டவர். | எரே 9:21 எரே 11:22 எரே 50:30 எரே 51:3 எரே 51:4 புலம் 2:21 எசே 27:27 ஆமோ 4:10 |
| 27 | தமஸ்குவின் மதில்களில் தீவைப்பேன்: பென்அதாதின் கோட்டைகளை அது சுட்டெரிக்கும். | ஆமோ 1:3-5 |
| 28 | பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் வீழ்த்திய கேதார், ஆட்சோர் அரசுகள் பற்றி, ஆண்டவர் கூறுவது இதுவே: புறப்படுங்கள், கேதாரை எதிர்த்துச் செல்லுங்கள்: கீழ்த்திசை மக்களை அழித்தொழியுங்கள். | எரே 2:10 ஆதி 25:13 1நாளா 1:29 உன்ன 1:5 ஏசா 21:13 ஏசா 21:16 ஏசா 21:17 ஏசா 42:11 எசே 27:21 |
| 29 | அவர்களின் கூடாரங்களும் மந்தைகளும் பிடிபடும்: கூடாரத் துணிகளும் மற்ற எல்லாப் பொருள்களும் கைப்பற்றப்படும்: அவர்களின் ஒட்டகங்களை அவர்களிடமிருந்து ஓட்டிச்செல்வர்: “எப்பக்கமும் ஒரே திகில்” என மனிதர் ஓலமிடுவர். | சங் 120:5 ஏசா 13:20 ஏசா 60:7 |
| 30 | ஆட்சோரின் குடிமக்களே! தப்பியோடுங்கள், தூரமாகச் சென்று பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் உங்களுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியுள்ளான்: உங்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்துள்ளான். | எரே 25:9 எரே 25:24 எரே 25:25 எரே 27:6 ஏசா 10:7 |
| 31 | புறப்படுங்கள்: கதவுகளோ தாழ்ப்பாள்களோ இன்றி அமைதியோடும் பாதுகாப்போடும் வாழும் மக்களினத்தார்க்கு எதிராக-தனித்து வாழும் மக்களினத்தார்க்கு எதிராக முன்னேறிச் செல்லுங்கள், என்கிறார் ஆண்டவர். | எரே 48:11 சங் 123:4 ஏசா 32:9 ஏசா 32:11 |
| 32 | அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையடிக்கப்படும்: அவர்களின் எண்ணற்ற மந்தைகள் பறிமுதலாகும்: முன்தலையை மழித்துக்கொள்ளும் பறக்கவிடுவேன்: எப்பக்கமுமிருந்தும் அவர்கள்மேல் அழிவைக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர். | எரே 49:36 உபா 28:64 எசே 5:10 எசே 5:12 எசே 12:14 எசே 12:15 |
| 33 | ஆட்சோர், குள்ளநரிகளின் உறைவிடம் ஆகும்: என்றும் பாழடைந்து கிடக்கும்: அங்கு எவரும் குடியிருக்கமாட்டார்: எவரும் அதில் தங்கவும் மாட்டார். | எரே 49:17 எரே 49:18 எரே 9:11 எரே 10:22 எரே 50:39 எரே 50:40 எரே 51:37 ஏசா 13:20-22 ஏசா 14:23 ஏசா 34:9-17 செப் 2:9 செப் 2:13-15 மல்கி 1:3 வெளிப் 18:2 வெளிப் 18:21 வெளிப் 18:22 |
| 34 | யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஏலாமைக் குறித்து இறைவாக்கினர் ஏரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு: | எரே 25:25 ஆதி 10:22 ஆதி 14:1 எஸ்றா 4:9 ஏசா 21:2 எசே 32:24 எசே 32:25 தானி 8:2 அப் 2:9 |
| 35 | படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஏலாமின் வலிமைக்கு ஆதாரமான வில்லை முறித்துப்போடுவேன். | எரே 50:14 எரே 50:29 எரே 51:56 சங் 46:9 ஏசா 22:6 |
| 36 | வானத்தின் நான்கு திசைகளினின்று நால்வகைக் காற்றுகளை ஏலாம்மீது வரவழைப்பேன்: இந்த எல்லாக் காற்றுகளினாலும் அவர்களைச் சிதறடிப்பேன். ஏலாமினின்று விரட்டியடிக்கப்பட்டோர் சென்றடையாத நாடே இராது. | தானி 7:2 தானி 7:3 தானி 8:8 தானி 8:22 தானி 11:4 வெளிப் 7:1 |
| 37 | ஏலாமின் எதிரிகள் முன்னும், அதன் உயிரைப் பறிக்கத் தேடுவோர் முன்னும் நான் அதை நடுங்கச்செய்வேன்: அவர்கள்மேல் தண்டனை வருவிப்பேன். என் சினம் அவர்கள் மேல் மூண்டெழும், என்கிறார் ஆண்டவர். அவர்களை முற்றிலும் அழித்துத் தீர்க்கும்வரை, அவர்களைப் பின்தொடருமாறு வாளை அனுப்பி வைப்பேன். | எரே 49:5 எரே 49:22 எரே 49:24 எரே 49:29 எரே 48:39 எரே 50:36 சங் 48:4-6 எசே 32:23 |
| 38 | ஏலாமில் என் அரியணையை அமைப்பேன்: அவர்களின் அரசரையும் தலைவர்களையும் அழிப்பேன், என்கிறார் ஆண்டவர். | எரே 43:10 தானி 7:9-14 |
| 39 | ஆயினும் இறுதி நாள்களில் நான் ஏலாமின் சொத்து, செல்வங்களைத் திரும்பக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர். | எரே 48:47 ஏசா 2:2 எசே 38:16 தானி 2:28 தானி 10:14 ஓசி 3:5 மீகா 4:1 |