சங்கீதம் 10:14-18 - WCV
14
ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்: கேட்டையும் துயரத்தையும் பார்த்து, உதவி செய்யக் காத்திருக்கின்றீர்: திக்கற்றவர் தம்மை உம்மிடம் ஒப்படைக்கின்றனர்: அனாதைக்கு நீரே துணை.
15
பொல்லார் மற்றும் தீயோர் கைகளை முறித்துவிடும்: அவர்களது பொல்லாங்கைத் தேடிக் கண்டுபிடித்து, அது அற்றுப்போகச் செய்யும்.
16
ஆண்டவர் என்றுமுள அரசர்: அவரது நிலத்தினின்று வேற்றினத்தார் அகன்று விடுவர்.
17
ஆண்டவரே, எளியோரின் விருப்பத்தை நீர் நிறைவேற்றுகின்றீர்: அவர்கள் உள்ளத்திற்கு ஊக்கம் அளித்து அவர்களுக்குச் செவிசாய்க்கின்றீர்.
18
நீர் அனாதைகளுக்கும் ஒடுக்கப்படுகிறவர்களுக்கும் நீதி வழங்குகின்றீர்: மண்ணினின்று தோன்றிய மனிதர் இனியும் அவர்களைத் துன்புறுத்த மாட்டார்.