நீ என் மக்கள் இஸ்ரயேலருக்கு எதிராய்ப் புறப்பட்டு, நாட்டை மூடும் மேகம்போல் முற்றுகையிடுவாய். கோகே! இனிவரும் நாள்களில் நான் உன்னை என் நாட்டிற்கு எதிராய் எழும்பச் செய்வேன். நான் மக்களினங்களின் கண்முன்னே என்னை உன் வழியாய்த் தூயவர் என வெளிப்படுத்தும்போது அவர்கள் நான் யாரென அறிந்து கொள்வர்.