ஏனெனில் தேர்கள், குதிரைகள், பெரும் படை ஆகியவற்றின் பேரொலியை சிரியாப் படையினர் கேட்கும்படி 'தலைவர்' செய்திருந்தார். எனவே அவர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, “இதோ! இஸ்ரயேல் அரசன் தனக்குத் துணையாக இத்திய அரசர்களையும் எகிப்தி அரசர்களையும் கூலிக்கு அமர்த்திக் கொண்டு நம்மைத் தாக்க வருகிறான்” என்று சொல்லிக்கொண்டனர்.