ஏசாயா 28:1-4 - WCV
1
எப்ராயிமின் குடிவெறியரின் மாண்புமிகு மணிமுடிக்கு ஐயோ கேடு! வாடுகின்ற மலராய், அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றதே! பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே! நறுமணம் பூசிய தலைவர்கள் மது மயக்கத்தால் வீழ்ந்து கிடக்கின்றனரே!
2
இதோ ஆற்றலும் வலிமையும் மிக்கோன் என் தலைவரிடம் உள்ளான்: அவன் கல்மழையென, அழிக்கும் புயலென, கரை புரண்டோடும் பெருவெள்ளமென வந்து, தன் கைவன்மையால் அதைத் தரையில் வீழ்த்துவான்.
3
எப்ராயிம் குடிவெறியரின் மாண்புமிகு மணிமுடி கால்களால் மிதிக்கப்படும்.
4
வாடுகின்ற மலராய் அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றது: நறுமணம் பூசிய தலைவர்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்: இது கோடைக்காலம் வரும் முன் பழுத்த அத்திப்பழம் போலாகும்: அதைக் காண்பவன் தன் கைக்கு எட்டியதும் அதை விழுங்கி விடுவான்.