செப்பனியா 2:13-15 - WCV
13
வடதிசைக்கு எதிராகத் தம் கையை ஓங்கி, ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்: நினிவே நகரைப் பாழடையச் செய்து, வறண்ட பாலைநிலமாக்குவார்.
14
அங்கே மந்தைகளும் எல்லாவகை விலங்குகளும் படுத்துக் கிடக்கும்: தூண்களின் உச்சியில் கூகையும் சாக்குருவியும் தங்கியிருக்கும்: பலகணியில் அமர்ந்தவாறு ஆந்தை அலறும்: நிலைக்கதவின்மேல் இருந்தவாறு காகம் கரையும்: கேதுரு மர வேலைப்பாடுகள் அழிக்கப்படும்.
15
“நான் ஒப்புயர்வு அற்றவன்” என்ற கவலையின்றிக் களிப்புற்றிருந்த நகர் இதுதானோ? இப்பொழுது அது காட்டு விலங்குகளின் குகையாகி எவ்வளவு பாழாய்ப் போயிற்று! அதைக் கடந்துகோகும் ஒவ்வொருவனும் சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான்.