41
நகர்கள் பிடிபடும்: கோட்டைகள் கைப்பற்றப்படும். அந்நாளில் மோவாபிய படைவீரர்களின் இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும்.
42
மோவாபு அழிக்கப்படும்: இனி அது ஒரு மக்களினமாய் இராது. அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமை அடித்துக் கொண்டது.
43
மோவாபின் மகனே, திகிலும் படுகுழியும் கண்ணியுமே உன்முன் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.
44
திகிலுக்கு அஞ்சி ஓடுபவன் படுகுழியில் விழுவான்: படுகுழியினின்று வெளியே வருபவன் கண்ணியில் மாட்டிக்கொள்வான். அவர்களுடைய தண்டனைக் காலத்தில் இவற்றை மோவாபின்மீது வரவழைப்பேன், என்கிறார் ஆண்டவர்.