1பார்வோன் காசாவைத் தாக்கும் முன்னர் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:யாத் 25:15-17 ஆமோ 1:6-8 செப் 2:4-7 சகரி 9:5-7 2ஆண்டவர் கூறுவது இதுவே: வடக்கினின்று வெள்ளம் பொங்கி எழுகின்றது: கரை புரண்டோடும் காட்டாறென அது மாறுகின்றது. நாட்டையும் அதில் உள்ள அனைத்தையும் நகரையும் அதன் குடிகளையும் மூழ்கடிக்கும். மனிதர் கூக்குரலிடுவர்: நாட்டு மக்கள் அனைவரும் ஓலமிடுவர்.எரே 46:7 எரே 46:8 ஏசா 8:7 ஏசா 8:8 ஏசா 28:17 ஏசா 59:19 தானி 11:22 ஆமோ 9:5 ஆமோ 9:6 நாகூ 1:8 வெளிப் 12:15 வெளிப் 12:16 வெளிப் 17:1 வெளிப் 17:15 3போர்க் குதிரைகளின் குளம்பொலியையும் தேர்களின் இரைச்சலையும் அவற்றின் உருளை ஓசையையும் கேட்டு, தந்தையர் கை சோர்ந்தமையால் தம் குழந்தைகளையும் திரும்பிப் பார்க்கமாட்டார்கள்.எரே 8:16 எரே 46:9 நியா 5:22 யோபு 39:19-25 எசே 26:10 எசே 26:11 நாகூ 2:4 நாகூ 3:2 நாகூ 3:3 4பெலிஸ்தியர் எல்லாரும் அழியும் நாள், தீர், சீதோனும் அவற்றின் எஞ்சியுள்ள துணையாளர் எல்லாரும் ஒழியும் நாள் நெருங்கிவிட்டது. ஆண்டவர் பெலிஸ்தியரையும் கப்தோர் தீவின் எஞ்சியோரையும் அழிக்கவிருக்கிறார்.எரே 46:10 சங் 37:13 ஏசா 10:3 எசே 7:5-7 எசே 7:12-7 எசே 21:25 எசே 21:29 ஓசி 9:7 லூக் 21:22 5காசா மொட்டையடிக்கப்படும்: அஸ்கலோன் அழிக்கப்படும்: அனாக்கியருள் எஞ்சியிருப்போரே, எத்துணைக் காலம் நீங்கள் உங்களையே காயப்படுத்திக் கொள்வீர்கள்?எரே 48:37 ஏசா 15:2 எசே 7:18 மீகா 1:16 6ஓ, ஆண்டவரின் வாளே! என்று நீ ஓய்ந்திருப்பாய்? நீ உன் உறைக்குள் செல்! அங்கே ஓய்வெடு, அமைதியாய் இரு.எரே 12:12 எரே 15:3 எரே 25:27 எரே 51:20-23 உபா 32:41 உபா 32:42 சங் 17:13 ஏசா 10:5 ஏசா 10:15 எசே 14:17 எசே 21:3-5 7ஆண்டவர் அதற்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்: அது எப்படி ஓய்ந்திருக்க முடியும்? அஸ்கலோனுக்கும் கடற்கரைப் பகுதிக்கும் எதிராக அவர் அதற்குப் பணி குறித்து வைத்துள்ளாரே!1சாமு 15:3 ஏசா 10:6 ஏசா 13:3 ஏசா 37:26 ஏசா 45:1-3 ஏசா 46:10 ஏசா 46:11 எசே 14:17 ஆமோ 3:6