6
ஆண்டவர் கூறுவது இதுவே: “காசா நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன். அவர்கள் ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்:
7
ஆதலால் காசாவின் கோட்டை மதில்கள்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.
8
அஸ்தோதில் குடியிருப்பவர்களையும் அஸ்கலோனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்: எக்ரோனுக்கு எதிராக என் கையை ஓங்குவேன்: பெலிஸ்தியருள் எஞ்சியிருப்போரும் அழிந்திடுவர்” என்கிறார் ஆண்டவராகிய என் தலைவர்.