செப்பனியா 2:4-7 - WCV
4
காசா குடியற்றுப்போகும்: அஸ்கலோன் பாழடைந்துபோகும்: அஸ்தோது நண்பகலில் விரட்டியடிக்கப்படும்: எக்ரோன் வேரொடு பிடுங்கியெறியப்படும்.
5
கடற்கரையில் வாழும் இனத்தாராகிய கெரேத்தியரே! உங்களுக்கு ஐயோ கேடு! ஆண்டவரின் வாக்கு உங்களுக்கு எதிராய் உள்ளது: பெலிஸ்தியரின் நாடே! கானானே! எவனும் குடியிராதபடி நான் உன்னை அழித்து விடுவேன்.
6
இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு இடையரின் குடில்களுக்கும் ஆடுகளின் பட்டிகளுக்குமே ஏற்றதாகும்.
7
அந்தக் கடற்கரை யூதாவின் குடும்பத்தவருள் எஞ்சியிருப்போர்க்கு உடைமையாகும்: அங்கே அவர்கள் தங்கள் ஆடுகளை மேய்த்து, மாலையில் அஸ்கலோன் வீடுகளில் படுத்திருப்பார்கள்: ஏனெனில் அவாகளுடைய கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது அக்கறை கொண்டு, முன்னைய நன்னிலைக்கு அவர்களை உயர்த்துவார்.