5
தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்: இதோ வருகின்றது தீங்கு மேல் தீங்கு!
6
முடிவு வந்துவிட்டது! வந்து விட்டது முடிவு! உனக்கெதிராக அது எழுந்து விட்டது: இதோ, அது வருகின்றது.
7
நாட்டில் வாழ்வோனே! எனக்குக் கேடுகாலம் வந்துவிட்டது. அந்த வேளை வந்தேவிட்டது. அது மலைகளின் மகிழ்ச்சி நாளல்ல: குழப்பத்தின் நாளே. நெருங்கிவிட்டது அந்நாள்.