15
தண்டுகள் பேழையிலுள்ள வளையங்களில் மாட்டப்பட்டிருக்கட்டும்.அங்கிருந்து அவை கழற்றப்படலாகாது.
16
நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கைக் கற்பலகைகளைப் பேழையினுள் வைப்பாய்.
17
மேலும் பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கை ஒன்று அமைப்பாய்.அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.