யோபு 39:19-25 - WCV
19
குதிரைக்கு வலிமை கொடுத்தது நீயோ? அதன் கழுத்தைப் பிடரியால் உடுத்தியது நீயோ?
20
அதனைத் தத்துக்கிளிபோல் தாவச் செய்வது நீயோ? அதன் செருக்குமிகு கனைப்பு நடுங்க வைத்திடுமே?
21
அது மண்ணைப் பறிக்கும்: தன் வலிமையில் மகிழும் போர்க்களத்தைச் சந்திக்கப் புறப்பட்டுச் செல்லும்.
22
அது அச்சத்தை எள்ளி நகையாடும்: அசையாது: வாள் முனைக்கண்டு பின்வாங்காது.
23
அதன்மேல் அம்பறாத் தூணி கலகலக்கும்: ஈட்டியும் வேலும் பளபளக்கும்:
24
அது துள்ளும்: பொங்கி எழும்: மண்ணை விழுங்கும்: ஊதுகொம்பு ஓசையில் ஓய்ந்து நிற்காது:
25
எக்காளம் முழங்கும்போதெல்லாம்”ஐஇ” என்னும்: தளபதிகளின் இடி முழக்கத்தையும் இரைச்சலையும் அப்பால் போரினையும் இப்பாலே மோப்பம் பிடிக்கும்.