சகரியா 9:5-7 - WCV
5
அஸ்கலோன் இதைக் கண்டு அஞ்சி நடுங்கும்: காசா நகர் வேதனையால் துடிதுடிக்கும்: அவ்வாறே எக்ரோனும் நம்பிக்கை இழந்துவிடும். காசா நகரிலிருந்து அரசன் அழித்தொழிவான்: அஸ்கலோன் குடியற்றுப்போகும்.
6
அஸ்தோதில் கலப்பினத்தார் குடியிருப்பார்கள்: பெலிஸ்தியரின் ஆணவத்தை நான் ஒழித்திடுவேன்.
7
இரத்தம் வடியும் இறைச்சியை அவர்கள் வாயினின்று அகற்றுவேன்: அருவருப்பான உணவை அதன் பற்களிடையிருந்து நீக்குவேன்: அவ்வினம் நம் கடவுளுக்கு எஞ்சியதாகும்: அது யூதாவின் குலங்களில் தலையாயது ஆகும். எக்ரோன் நகரத்தார் எபூசியரைப் போல் இருப்பார்கள்: