எசேக்கியேல் 25:8-11 - WCV
8
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மோவாயும் சேயிரும், “இதோ! யூதா வீட்டார் மற்ற மக்களினங்களைப் போலவே உள்ளனர்” எனக் கூறினர்.
9
எனவே, மோவாபின் மலை வாயிலைத் திறப்பேன்: அதன் அணிகலனாகவும் எல்லையாகவும் உள்ள பெத்தசிமோத்து, பாகால்மெகோன், கிரியத்தாயிம் ஆகியவற்றை அழிப்பேன்.
10
மோவாபை அம்மோனுடன் சேர்த்து, கீழை நாட்டினர்க்கு உரிமையாகக் கொடுப்பேன். அது மக்களினங்களிடையே நினைவுகூரப்பட மாட்டாது.
11
மோவாபின்மேல் தண்டனையை வருவிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அது அறிந்து கொள்ளும்.