இப்பாடலை எழுதிய சகோதரன் கடையனோடை I. பாக்கியநாதன், 07.08.1945 அன்று, திரு. A.P.S. ஐயாத்துரைக்கும், எமி அம்மாளுக்கும் மைந்தனாகப் பிறந்தார். பக்தியுள்ள குடும்பமானதால், சிறுவயதிலேயே காலை மாலை ஆலய ஆராதனைக்கு ஒழுங்காகச் செல்வார். வேத பாடத் தேர்வுகளில் பரிசுகளும் பெற்றார். ஆரம்பக் கல்வியைத் தன் சொந்த ஊரான கடையனோடையிலும், உயர்நிலைக் கல்வியை நாசரேத் மர்காஷியஸ் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பின்னர் பாளையங்கோட்டை பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 1951-1953 வரை படித்து முடித்தார்.
பாக்கியநாதன் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே, 'கடம்' வாசிக்கவும், பின்பு தபேலா வாசிக்கவும், ஆசிரியர் பயிற்சிக் காலத்தில் ஆர்மோனியம் வாசிக்கவும் தாமாகவே கற்றுக்கொண்டார்.
11.11.1970-அன்று கோகிலம் ஜேன் என்ற ஆசிரியையை மணம்புரிந்தார். ஒருமுறை அவர் மனைவி திடீரென சுகவீனமானார். காய்ச்சல் வந்தது. மாத்திரைகள் கொடுத்து மூன்று நாளாகியும் காய்ச்சல் விடவேயில்லை. மிகவும் மெலிந்து போனார். கடையனோடையிலிருந்த மருத்துவரிடம் சென்றார்கள். பரிசோதனை நடத்திய அவர், பாக்கிய நாதனைத் தனியாக அழைத்து, "சார், படித்தும் அறிவில்லாமல் இருந்திருக்கிறீர்களே! உங்கள் மனைவிக்கு T.B. வியாதி முற்றிவிட்டது. திருநெல்வேலி அல்லது தூத்துக்குடியிலுள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு உடனே அழைத்துச் செல்லுங்கள்" என்றார். பயங்கரமான அதிர்ச்சியில், செய்வதறியாது திகைத்துப்போன பாக்கியநாதன், தன் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
பாக்கியநாதன் சோர்வுடன், சேகரகுருவான அருள்திரு.சாலமோன் சைமனிடம் சென்றார். விபரத்தைச் சொல்லி, தூத்துக்குடிக்கு மனைவியை அழைத்துச் செல்ல, தனது சம்பளத்தில் முன்பணமாக, இருநூறு ரூபாய் கேட்டார். போதகரிடம் அப்போது பணமில்லாததால், "பாக்கியநாதன், நாம் இன்று இரவு நன்றாக ஜெபிப்போம். கர்த்தர் நமக்கு உதவி செய்வார்" என்று கூறி, அவரை அனுப்பிவிட்டார்.
அன்றிரவு, ஜேன் காய்ச்சலின் அகோரத்தில், முனங்கிக்கொண்டே தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 10 மணிக்குமேல், பாக்கியநாதன் தன் மனைவி படுத்திருந்த கட்டிலின் அருகே முழங்கால்படியிட்டு, பரம தகப்பனை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தார். "தகப்பனே, நான் உம்மைத் துதித்துப் பாடுகிற உம்முடைய பிள்ளை. கதாகாலட்சேபம் மூலம் உம்முடைய நாமத்தை ஊர்ஊராகச் சென்று மகிமைப்படுத்தி வருகிறேன். எனக்கு இப்படி ஒரு சோதனையா? என் மனைவிக்கு இப்படியொரு கொடிய வியாதியா? ஆண்டவரே, நீர் நினைத்தால் ஒரு நொடியிலே இந்த வியாதியை நீக்க முடியும். என் வாழ்விலும் ஏன் நீர் அற்புதம் செய்யக் கூடாது?" என்று கண்ணீர்விட்டு ஜெபித்தார். இவ்வாறு இரவு 12 மணிவரை ஜெபித்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றார். "இனி இயேசு பார்த்துக் கொள்ளுவார்," என்ற விசுவாசத்தோடு தூங்கிவிட்டார்.
மறுநாள் அதிகாலை சுமார் 5 மணி இருக்கும். பாக்கியநாதனின் வீட்டின் கதவு தட்டப்பட்டது. சத்தம் கேட்டு விழித்த பாக்கியநாதன் கதவைத் திறந்தார். போதகர் சாலமோன் சைமன் நின்றுகொண்டிருந்தார். "பாக்கியநாதன், டீச்சர் எப்படியிருக்காங்க?" என்றார். "ஐயா, காய்ச்சல் விடவேயில்லை" என்றார் பாக்கியநாதன். போதகர், "சுகமாகிவிடும், நேற்று இரவு பத்து மணிக்கு நெல்விற்ற காணிக்கைப் பணம் வந்தது, இந்தாங்க" என்று கூறி, இருநூறு ரூபாயைப் பாக்கியநாதனிடம் கொடுத்தார். மீண்டும், "நான் இரவு வெகுநேரம் ஜெபித்திருக்கிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அற்புதம் செய்வார்," என்று கூறி ஜெபித்துவிட்டுச் சென்றார்.
காலை சுமார் 11 மணியளவில் தூத்துக்குடிக்குச் சென்றனர். அவர்களுக்குப் பழக்கமான டாக்டர். திருமதி. பிரேமா பாலச்சந்திரனிடம் விபரத்தைக் கூறினார். டாக்டர் அவர்களை ஆறுதல் படுத்தி, ரத்த சோதனை, எக்ஸ்ரே முதலியவை எடுக்க ஏற்பாடு செய்தார். "சோதனைகளின் முடிவுகள் வர, காலதாமதமாகும். ஆகவே, நீங்கள் சாப்பிட்டுவிட்டு , மதியம் 3 மணிக்கு வாருங்கள்" என்றார். அதன்படி, மாலை 3 மணிக்கு மீண்டும் டாக்டரிடம் வந்தனர்.
எல்லாச் சோதனைகளின் முடிவுகளையும் பார்த்த டாக்டர், பாக்கியநாதனைப் பார்த்து, Mr. பாக்கிய நாதன், உங்கள் மனைவிக்கு T.B. வியாதியென்று யார் கூறியது? அந்த வியாதிக்கான எந்த அடையாளமும் இல்லையே! இது வெறும் சளிக்காய்ச்சல் தான், வேறொன்றுமில்லை" என்று கூறி ஊசி போட்டு மாத்திரை தந்தார். பாக்கிய நாதனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை!
"நேற்று ஒரு மருத்துவர் T.B. வியாதி முற்றிவிட்டது என்றார். இன்று ஒரு மருத்துவர், அந்த வியாதிக்கான எந்த அடையாளமுமில்லை என்கிறார். அப்படியானால், இடையில் நடந்தது என்ன?" என்று சிந்தித்தார். "என் தேவன் இயேசு கிறிஸ்து தான், என் ஜெபத்தைக் கேட்டு, அற்புதம் செய்திருக்கிறார்" என்று விசுவாசத்துடன் வீடு திரும்பினார். ஊர் திரும்புவதற்குள் ஜேனின் காய்ச்சல் மாயமாய் மறைந்தது. பாக்கிய நாதன் போதகரிடம் சென்று, "ஐயா, இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்பதை என் வாழ்க்கையில் நிரூபித்து விட்டார்!" என்று ஆனந்தக் கண்ணீருடன் கூறினார்.
இரவு பத்து மணிக்குமேல் பாக்கிய நாதனின் வீட்டில் அனைவரும் தூங்கியபின், தன் வாழ்விலே அற்புதம் செய்த ஆண்டவருக்கு நன்றி செலுத்த பாக்கிய நாதன் விரும்பினார். "காணிக்கை செலுத்தப் பொன்னுமில்லை, பொருளுமில்லை. ஆனால், அவர் தந்த தாலந்தாகிய பாட்டெழுதி, ராகம் அமைக்கும் வரமிருக்கிறதே" என எண்ணியவராய், வழக்கம் போல சமையலறைக்குச் சென்றார். பாடலும், ராகமும் மளமளவென மடைதிறந்த வெள்ளம்போல வர ஆரம்பித்தன; எழுதினார்,
"நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர்"
இப்பாடல் சகோதரன் பாக்கிய நாதனுக்கு மட்டுமல்ல, அநேகருக்குச் சாட்சிப் பாடலாக அமைந்து, அநேகரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறது.
இப்பாடல், சகோதரன் A.J. சத்தியாவின் இன்ப இசையில், சகோதரி திருமதி. ஹெலன் சத்தியாவின் பசுமையான மென்குரலில், இசைத் தட்டில் முதன்முறையாக வெளிவந்தது.
ஆசிரியர்: மைகேல்
DME படிப்பை வெற்றியுடன் முடித்து, தன் விடுமுறை நாட்களைக் கழிக்கத் தன் அக்கா வீட்டிற்குச் சென்றான், 20-வயது நிரம்பிய வாலிபன் மைக்கேல். அக்காவின் கணவர் மறைத்திரு. D. Williams பட்டுக்கோட்டை CSI ஆலயப் போதகர். அந்நாட்களில் பிரதரன் அசெம்பிளி ஊழியர்கள் பாண்டிச்சேரியிலிருந்து அங்கு வந்து உயிர் மீட்சிக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.
மிஷினரி ஜான் கொடுத்த தேவசெய்தியின் மூலம் ஆவியானவர் பேச, 18.9.1969 அன்று மைக்கேல் இயேசுவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான்.
பின்னர் மைக்கேல் வேலையிலமர்ந்த போது, ஆண்டவரின் அழைப்பைத் தன் உள்ளத்தில் உணர்ந்தார். எனவே, அவருடைய ஊழியம் செய்ய, 1971-ம் ஆண்டு இந்திய இல்லந்தோறும் நற்செய்தி இயக்கத்தில் முழுநேரப் பணியாளனாகச் சேர்ந்தார்.
1972-ம் ஆண்டு இவ்வியக்கத்தின் முன்னோடி மிஷனரியாகத் தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஹரூர் சென்றார். அங்கிருந்த சிலோன் இந்தியப்பொது மிஷன் ஆலயத்தை மையமாகக் கொண்டு இல்லந்தோறும் நற்செய்தியை அறிவித்தார்.
அந்நாட்களில் அத்திருச்சபையின் ஞாயிறுபள்ளிப் பொறுப்பும் மைக்கேலிடம் கொடுக்கபப்பட்டது. அந்த ஞாயிறு பள்ளிப் பிள்ளைகள் உற்சாகமாகப் பாடுவதைப் பார்த்து, அவர்களுக்குத்தான் அறிந்த பாடல்களைக் கற்றுக் கொடுக்க முயன்றார்.
ஆனால் அவையனைத்தும் அப்பிள்ளைகளுக்கு முன்னரே தெரிந்திருந்தது. எனவே, அப்பிள்ளைகளை உற்சாகப்படுத்த, புதுப்பாடல்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்.
இந்நிலையில் தனது இரட்சிப்பின் அனுபவத்தையே தன் சாட்சிப் பாடலாகவும், அப்பிள்ளைகளுக்கு சவால் அழைப்பாகவும் இருக்க எண்ணி, இப்பாடலை இயற்றினார்.
பிள்ளைகள் புரிந்து பாடக்கூடிய எளிய நடையில் எழுதப்பட்;ட இப்பாடலின் 4 சரணங்களையும் சகோதரர் மைக்கேல் ஒரே நாளில் இயற்றி முடித்தார். இப்பாடலின் ராகத்தையும் அவரே அமைத்தார். அடுத்த ஞாயிறே, மைக்கேலின் ஆர்மோனியப் பின்னிசையுடன் ஞாயிறு பள்ளியில் இப்பாடல் அரங்கேற்றமானது. இந்த உற்சாகப் பாடலின் மூலம், பிள்ளைகள் இரட்சிப்பின் சந்தோஷத்தை அறிந்து கொண்டனர்.
பின்னர்IEHC-ன் வருடாந்திர கன்வென்ஷன் கூட்டங்களில் மிஷனரிகள் இப்பாடலைப் பாடினர்.
1974-ம் ஆண்டு IEHC நாகர்கோவில் பகுதிகளில் தங்கள் நற்செய்திப் பணியைச் செய்து வந்தனர். அக்குழுவில் IEHC-ன் முக்கிய பாடகரான சகோதரர் டி.தேவ பிச்சை முன்னோடி மிஷனரியாக இருந்தார். அந்த ஆண்டின் CSI திருமண்டல கன்வென்ஷன் கூட்டங்களின் பாடல் பொறுப்பாளர் புதுப்பாடல்களைத் தேடி தேவபிச்சையிடம் வந்தார்.
சகோதரர் தேவபிச்சை அவருக்குப் பாடிக்காட்டிய பாடல்களில் இப்பாடலும் ஒன்று. இப்பாடலைத் தெரிந்தெடுத்து திருமண்டல கன்வென்ஷன் கூட்டங்களில் பாடினர்.
பின்னர் 1975-ம் ஆண்டு, ஆசீர்வாத இளைஞர் இயக்க பிளெஸ்ஸோ முகாமிலும் இப்பாடல் பாடப்பட்டு பிரபலமானது. இதற்கு திருச்சி இசைவல்லுரனராக திரு. கூலிங் இசை அமைத்து, பிரபல பாடகியான திருமதி பாரதி பாடலைப் பாடவைத்து, பதிவு செய்து, இசைத் தட்டில் வெளியிட்டார். இதின் மூலம் இப்பாடல் பலருக்கும் அறிமுகமானது.
இப்பாடலின் வார்த்தைகளை ஆராய்ந்த நிபுணர்கள், “நானோ பரலோகத்தில்’ என்ற வரி சுய நல நோக்கை வெளிப்படுத்துகிறது,’’ எனக் கருத்துத் தெரிவித்தனர். பாடலைக் கேட்பவரின் ஆசையைத் தூண்டி, அவர்களையும் இவ்வரிக்கு உரிமையாளர்களாக மாற்றுவதே தன் எண்ணமாயிருந்தது, என சகோதரர் மைக்கேல் தெளிவுபடுத்துகிறார்.
"இப்பாடலை ஆண்கள் பாடுவார்கள்; சிறுவர் விசில் அடிப்பார்கள்; பெண்கள் தங்கள் பிள்ளைகளைத் தூங்க வைக்கும் தாலாட்டுப் பாடலாகப் பாடுவார்கள்!" என, "லண்டன் டெய்லி" என்ற செய்தித்தாள், ஜிப்ஸி ஸ்மித்தின் கூட்டத்தில், இப்பாடலுக்குக் கிடைத்த அறிமுகத்தை, அப்படியே வெளியிட்டிருந்தது!
ஆரம்ப நாட்களில் சிறுவருக்கென்று எழுதப்பட்ட இப்பாடலை, இன்று அனைத்து வயது மக்களும் விரும்பிப் பாடுகிறார்கள். எனவே, நமது பாடல் புத்தகங்களில் பிரபலமான பாடலாக இது விளங்குகிறது.
இப்பாடலை எழுதிய போதகர் ஜான்சன் ஓட்மன் ஜீனியர், 21.4.1856-ல் நியூஜெர்சியிலுள்ள மெட்போர்டுக்கருகில் பிறந்தார். பாடல் வரம் பெற்ற இவரது தந்தையின் மூலம், பல திருச்சபைப் பாடல்களை சிறுவயதிலேயே கற்றுக் கொண்டார். 5000 பாடல்களுக்கு மேல் இயற்றிய இவர், நியூஜெர்சியிலுள்ள பெரிய ஆயுள் காப்பு நிறுவனத்தின் பொறுப்பாளராகப் பணிபுரிந்து வந்தார். ஓட்மன் எழுதிய பாடல்கள் அனைத்திலும், இப்பாடலே சிறந்த பாடலாகும்.
1897-ல் "இளைஞர் பாடல்கள்" என்ற பாடல் புத்தகத்தில் இப்பாடல் வெளியாகி, உலகமெங்கும் பாடப்படும் பாடலாக மாறிவிட்டது. "பூமியின் இருண்ட இடங்களை ஒளிமயமாக்கும் சூரிய ஒளிக்கதிர்கள் போல இப்பாடல் விளங்குகிறது" என்று எழுத்தாளர் ஒருவர் கூறினார். அமெரிக்காவில் எழுதப்பட்ட பாடல்களிலெல்லாம், இங்கிலாந்து தேசத்தில் சிறப்பான வரவேற்புப் பெற்றது இப்பாடல் தான்.
பல இசைப் பள்ளிகளை நிறுவி, நற்செய்திக் கூட்டங்களில் பாடல் நேரங்களை முன் நின்று நடத்திப் புகழ்பெற்ற உ.ஞ. எக்செல் இப்பாடலுக்கு ராகம் அமைத்தார். இவர் தாமே 2000 பாடல்களை எழுதி, அவற்றிற்கு இசை அமைத்து, பாடல் புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1. இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)
பின் நோக்கேன் நான் (2)
2. சிலுவை என் முன்னே, உலகம் என் பின்னே (3)
பின் நோக்கேன் நான் (2)
3. கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு (3)
பின் நோக்கேன் நான் (2)
4. யேசு என் நேசர் மாம்சம் என் தோஷம் (3)
பின் நோக்கேன் நான் (2)
5. யாரில்லையெனினும் பின் தொடர்வேனே (3)
பின்னோக்கேன் நான் (2)
150 ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் மிகப்பெரும் எழுப்புதல் உண்டாயிற்று. அதன் விளைவாக இங்கிலாந்திலிருந்தும், ஜெர்மனியிலிருந்தும் பல மிஷனெரிகள் வட-கிழக்கு இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்க வந்தார்கள். அந்நாட்களில், வட-கிழக்கு இந்தியா இந்நாட்களில் உள்ளது போல பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருக்க வில்லை. நூற்றுக்கணக்கான மலைவாழ் பழங்குடி இனத்தவர்களை உள்ளடக்கிய அப்பகுதி, அஸ்ஸாம் என்று அழைக்கப்பட்டது.
அதில் நாகா என்ற ஒரு பழங்குடி இனம் இருந்தது. அவர்கள் ஆதிவாசிகளாயிருந்தார்கள். மிகவும் கொடூரமானவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் சமுதாய வழக்கப்படி அந்த இனத்தில் உள்ள ஆண்கள் தங்கள் வாழ் நாளில் எத்தனை மனிதத் தலைகளை (உயிரோடு உள்ளவர்களின் தலைகளை) வெட்டி சேகரிக்க முடியுமோ, அத்தனையையும் சேகரிக்க வேண்டும். அதனால் அவர்கள் தலை வெட்டுபவர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். ஒரு மனிதன் தனது மனைவியை பாதுகாக்கும் அவனது வலிமையும் பெலமும், அவன் இதுவரை எத்தனை தலைகளை வெட்டி சேகரித்து வைத்துள்ளான் என்பதை வைத்து அளவிடுவார்கள். ஆகவே திருமண வயதில் இருக்கும் ஒரு வாலிபன் தன்னால் இயன்ற அளவு மனித தலைகளை வெட்டி தன்னுடைய வீட்டின் சுவரிலே மாட்டி வைத்திருப்பான்.
இந்த கொடூரமான ஆதிவாசிகளின் மத்தியில், இயேசு கிறிஸ்துவின் அன்பையும், சமாதானத்தையும், விசுவாசத்தையும் அறிவிக்க வேல்ஸ் மிஷனெரிகள் வந்தார்கள். எதிர்பார்த்தது போல அவர்கள் வரவேற்க்கப்படவில்லை.
ஒரு வேல்ஸ் மிஷனெரி வெற்றிகரமாக ஒரு நாகா ஆதிவாசி மனிதனையும், அவனது மனைவியையும், இரு பிள்ளைகளையும் கிறிஸ்துவண்டை நடத்தினார். இந்த மனிதனின் அசைக்க முடியா விசுவாசம் அந்த கிராமத்தில் இருந்த மற்றவர்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ள வைத்தது. இதனால் கடும் கோபமடைந்த கிராமத்தலைவன், அந்த முழு கிராமத்தையும் ஒன்று கூட்டினான். அந்த பிறகு, முதலாவதாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அந்த குடும்பத்தை முன்னால் அழைத்து, எல்லாருக்கும் முன்பாக உன் விசுவாசத்தை நீ மறுதலிக்க வேண்டும் அல்லது நீ மரணத்தை சந்திக்க வேண்டும் என்று சொன்னான்.
பரிசுத்த ஆவியானவரால் உந்தப்பட்டவனாய், அந்த மனிதன் உடனடியாக ஒரு பாடலை பாடினான்.
அவன் பாடினான்:
இதனால் கடும் கோபமடைந்த கிராமத்தலைவன், தன்னுடைய வீரர்களிடம், அவனது இரு பிள்ளைகளையும் அம்பெய்து கொல்லும்படி சொன்னான். இரு பிள்ளைகளும் தரையில் விழுந்து துடித்துக்கொண்டிருக்கையில் கிராமத்தலைவன் சொன்னான், “இப்பொழுதாவது உன்னுடைய விசுவாசத்தை மறுதலிப்பாயா? உன்னுடைய இரு மகன்களையும் இழந்துவிட்டாய், உன் மனைவியையும் இழக்கப்போகிறாய்” என்றான்.
ஆனால் அந்த மனிதனோ பின்வரும் இரு வரிகளை அதற்கு பதிலாகப் பாடினான்:
இதனால் மிகவும் கோபமடைந்த அந்த கிராமத்தலைவன், அவனது மனைவியை கொல்லும்படி உத்தரவிட்டான், அவளும் கொல்லப்பட்டாள். இப்பொழுது அந்த கிராமத்தலைவன் சொன்னான், உனக்கு இறுதி வாய்ப்புத் தருகிறேன். விசுவாசத்தை மறுதலித்து உயிர்வாழ் என்றான். மரணத்தை எதிர்கொண்டிருக்கும் அந்த மனிதன், நம் மனதைவிட்டு நீங்கா இந்த இறுதி வரிகளைப் பாடினான்.
அவனது பிள்ளைகள் மற்றும் மனைவியைப்போலவே அவனும் கொல்லப்பட்டான். ஆனால் அவனது அந்த அசாதாரணமான மரணம் ஒரு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வெகு தொலைவில் வாழ்ந்த ஒரு மனிதனுக்காக ஏன், இந்த மனிதனும், அவனது மனைவியும், பிள்ளைகளும் தங்கள் உயிரை இழக்க வேண்டும்? என்று அந்த கிராமத்தலைவன் வியந்தான்! இந்த குடும்பத்திற்கு பின்னால் ஏதோ ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உண்டு, எனக்கு அந்த சக்தி வேண்டும் என்று சொல்லி, உடனடியாக, “நானும் இயேசுவுக்கு சொந்தமானவன்!” என்று அறிக்கையிட்டான். இந்த வார்த்தைகளை அந்த கூட்டம் தங்கள் தலைவனின் வாயிலிருந்து கேட்ட உடனே, அந்த முழு கிராமமும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டது.
இதுதான் நம் தேவனின் மாபெரும் வல்லமை என்பது!
சங்கீதம் 126:6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.
அந்த நாகா இனம்தான் இன்றைய நாகலாந்து! இந்தியாவின் ஒரே முழு கிறிஸ்தவ மாநிலம்!

எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.