| 1 | ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஐயோ கேடு! | எரே 2:8 எரே 2:26 எசே 13:3 எசே 34:2 சகரி 11:17 மத் 23:13-29 லூக் 11:42-52 |
| 2 | தம் மக்களை வழி நடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்: அதனைத் துரத்தியடித்தீர்கள்: அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். | மத் 25:36 மத் 25:43 யாக் 1:27 |
| 3 | என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப் பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும். | எரே 29:14 எரே 30:3 எரே 31:8 எரே 32:37 உபா 30:3-5 சங் 106:47 ஏசா 11:11-16 ஏசா 27:12 ஏசா 27:13 ஏசா 43:5 ஏசா 43:6 எசே 11:17 எசே 34:13-31 எசே 36:24 எசே 36:37 எசே 37:21-27 எசே 39:27 எசே 39:28 ஆமோ 9:14 ஆமோ 9:15 மீகா 7:12 செப் 3:19 செப் 3:20 சகரி 10:8-12 |
| 4 | அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா: திகிலுறா: காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர். | எரே 3:14 எரே 3:15 எரே 33:26 சங் 78:70-72 ஏசா 11:11 எசே 34:23-31 ஓசி 3:3-5 மீகா 5:2 மீகா 5:4 மீகா 5:5 மீகா 7:14 யோவா 21:15-17 அப் 20:28 அப் 20:29 1பேது 5:1-4 |
| 5 | ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நாள்கள் வருகின்றன: அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள “தளிர்” தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார். | எரே 30:3 எரே 31:27 எரே 31:31-38 எரே 33:14 எபிரெ 8:8 |
| 6 | அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்: இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். “யாவே சித்கேனூ” என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும். | உபா 33:28 உபா 33:29 சங் 130:7 சங் 130:8 ஏசா 12:1 ஏசா 12:2 ஏசா 33:22 ஏசா 45:17 எசே 37:24-28 ஓசி 1:7 ஒபதி 1:17 ஒபதி 1:21 சகரி 10:6 மத் 1:21 லூக் 1:71-74 லூக் 19:9 லூக் 19:10 ரோம 11:26 ரோம 11:27 |
| 7 | ஆதலால் ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது, “எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை” என்று எவரும் சொல்லார். | எரே 23:3 எரே 16:14 எரே 16:15 எரே 31:31-34 ஏசா 43:18 ஏசா 43:19 |
| 8 | மாறாக, “இஸ்ரயேல் குடும்ப மரபினர் தங்கள் சொந்த நாட்டில் வாழும்படி, அவர்களை வடக்கு நாட்டிலிருந்தும் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை” என்று கூறுவர். | எரே 23:3 ஏசா 14:1 ஏசா 27:12 ஏசா 27:13 ஏசா 43:5 ஏசா 43:6 ஏசா 65:8-10 எசே 34:13 எசே 36:24 எசே 37:25 எசே 39:28 செப் 3:20 ஆமோ 9:14 ஆமோ 9:15 |
| 9 | இறைவாக்கினரைக் குறித்து: என்னுள் என் இதயம் நொறுங்கியுள்ளது: என் எலும்புகள் எல்லாம் நடுநடுங்குகின்றன: ஆண்டவரை முன்னிட்டும் அவர்தம் புனித சொற்களை முன்னிட்டும் நான் குடிபோதையில் இருப்பவன் போல் ஆனேன்: மதுவினால் மயக்கம் கொண்டவன் ஆனேன். | எரே 9:1 எரே 14:17 எரே 14:18 2இரா 22:19 2இரா 22:20 எசே 9:4 எசே 9:6 தானி 8:27 ஆபகூ 3:16 |
| 10 | ஏனெனில் நாட்டில் விபசாரர்கள் நிரம்பியுள்ளனர்: சாபத்தின் விளைவாக நாடு புலம்புகிறது: பாலைநிலத்துப் பசும்புல் தரை உலர்ந்து போயிற்று: அவர்கள் வழிகள் தீயவை: அவர்கள் ஆற்றல் தீயவற்றிற்குப் பயன்படுகின்றது. | எரே 5:7 எரே 5:8 எரே 7:9 எரே 9:2 எசே 22:9-11 ஓசி 4:2 ஓசி 4:3 மல்கி 3:5 1கொரி 6:9 1கொரி 6:10 கலா 5:19-21 எபிரெ 13:4 யாக் 4:4 |
| 11 | இறைவாக்கினர், குருக்கள் ஆகிய இரு சாராரும் இறையுணர்வு அற்றவர்கள்: என் இல்லத்தில் அவர்களின் தீச்செயல்களை நான் கண்டுள்ளேன், என்கிறார் ஆண்டவர். | எரே 23:15 எரே 5:31 எரே 6:13 எரே 8:10 எசே 22:25 எசே 22:26 செப் 3:4 |
| 12 | எனவே, அவர்கள் பாதை வழுக்கிவிடக்கூடியது: இருளில் அவர்கள் தள்ளப்பட்டுத் தடுக்கி விழுவர்: அவர்கள் தண்டிக்கப்படும் ஆண்டில் அவர்கள்மேல் தீமை வரச் செய்வேன், என்கிறார் ஆண்டவர். | எரே 13:16 சங் 35:6 சங் 73:18 நீதி 4:19 |
| 13 | சமாரியாவின் இறைவாக்கினரிடையே ஒவ்வாத செயல் ஒன்று கண்டேன்: அவர்கள் பாகால் பெயரால் பொய் வாக்குரைத்து என் மக்கள் இஸ்ரயேலைத் தவறான வழியில் நடத்தினார்கள். | ஓசி 9:7 ஓசி 9:8 |
| 14 | எருசலேமின் இறைவாக்கினரிடையே திகிலூட்டும் செயல் ஒன்று கண்டேன்: அவர்கள் விபசாரம் செய்கிறார்கள்: பொய்ம்மை வழியில் நடக்கிறார்கள்: தீயோரின் கைகளை வலுப்படுத்துகிறார்கள்: இதனால் யாரும் தம் தீய வழியிலிருந்து திரும்புவதில்லை: அவர்கள் எல்லாரும் என் பார்வையில் சோதோமைப் போன்றவர்கள்: எருசலேமின் குடிமக்கள் கொமோராவைப் போன்றவர்கள். | எரே 5:30 எரே 5:31 எரே 14:14 எரே 23:32 எசே 13:2-4 எசே 13:16-4 எசே 22:25 ஏசா 41:6 ஏசா 41:7 மீகா 3:11 செப் 3:4 2பேது 2:1 2பேது 2:2 |
| 15 | எனவே இறைவாக்கினரைப் பற்றிப் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: அவர்களை எட்டிக்காய் உண்ணச் செய்வேன்: நஞ்சு கலந்த நீரைக் குடிக்கச் செய்வேன். ஏனெனில், எருசலேம் இறைவாக்கினரிடமிருந்தே இறைஉணர்வின்மை நாடெங்கும் பரவிற்று. | எரே 8:14 எரே 9:15 சங் 69:21 புலம் 3:5 புலம் 3:15 புலம் 3:19 மத் 27:34 வெளிப் 8:11 |
| 16 | படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களுக்கு வீண் நம்பிக்கை கொடுக்கும் இந்த இறைவாக்கினரின் சொற்களுக்குச் செவி கொடுக்காதீர்கள். அவர்கள் பேசுவது ஆண்டவருடைய வாய்மொழியன்று: மாறாகத் தங்கள் உள்ளத்துக் கற்பனைகளே. | எரே 27:9 எரே 27:10 எரே 27:14-17 எரே 29:8 நீதி 19:27 மத் 7:15 2கொரி 11:13-15 கலா 1:8 கலா 1:9 1யோவா 4:1 |
| 17 | ஆண்டவரின் வாக்கை இகழ்வோரிடம் “உங்களுக்கு நலம் உண்டாகும்” எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் இதயத்தின் பிடிவாத்தின்படி நடப்போர் அனைவரிடமும் “உங்களுக்குத் தீமை நேராது” என்று கூறுகிறார்கள். | எண் 11:20 1சாமு 2:30 2சாமு 12:10 மல்கி 1:6 லூக் 10:16 1தெச 4:8 |
| 18 | ஆண்டவரின் மன்றத்தில் நின்றவன் யார்? அவர் சொல்லைக் கண்டவன் அல்லது கேட்டவன் யார்? அவர் சொல்லுக்குச் செவிகொடுத்து அதனை அறிவித்தவன் யார்? | எரே 23:22 1இரா 22:24 யோபு 15:8-10 2நாளா 18:23 ஏசா 40:13 ஏசா 40:14 1கொரி 2:16 |
| 19 | இதோ ஆண்டவரின் சீற்றம் புயலாய் வீசுகின்றது: அது தீயோரின் தலைமேல் சூறாவளியாய்ச் சுழன்றடிக்கின்றது. | எரே 4:11 எரே 25:32 எரே 30:23 சங் 58:9 நீதி 1:27 நீதி 10:25 ஏசா 5:25-28 ஏசா 21:1 ஏசா 40:24 ஏசா 66:15 ஏசா 66:16 ஆமோ 1:14 நாகூ 1:3-6 சகரி 9:14 |
| 20 | ஆண்டவர் தம் இதயத்தின் திட்டங்களைச் செயலாக்கி நிறைவேற்றும்வரை அவர் சினம் தணியாது: வரப்போகும் நாள்களில் இதனை நீங்கள் முற்றிலும் அறிந்துகொள்வீர்கள். | எரே 30:24 ஏசா 14:24 சகரி 1:6 சகரி 8:14 சகரி 8:15 |
| 21 | அந்த இறைவாக்கினர்களை நான் அனுப்பவில்லை: அவர்களாகவே ஓடிவந்தார்கள். நான் அவர்களோடு பேசவில்லை: அவர்களாகவே இறைவாக்கு உரைத்தார்கள். | எரே 23:32 எரே 14:14 எரே 27:15 எரே 28:15 எரே 29:9 எரே 29:31 ஏசா 6:8 யோவா 20:21 அப் 13:4 ரோம 10:15 |
| 22 | ஆனால் அவர்கள் என் மன்றத்தில் நின்றிருந்தால் என் சொல்லை என் மக்களுக்கு எடுத்துரைத்து, அவர்கள தங்கள் தீய வழிகளையும் தீச்செயல்களையும் விட்டு விலகச் செய்திருப்பர். | எரே 23:18 எசே 2:7 எசே 3:17 அப் 20:27 |
| 23 | ஆண்டவர் கூறுவது: அருகில் இருந்தால்தான் நான் கடவுளா? தொலையில் இருக்கும்போது நான் கடவுள் இல்லையா? | 1இரா 20:23 1இரா 20:28 சங் 113:5 சங் 139:1-10 எசே 20:32-35 யோனா 1:3 யோனா 1:4 |
| 24 | என் கண்ணில் படாதபடி எவராவது பதுங்கிடங்களில் ஒளிந்துகொள்ள முடியுமா? என்கிறார் ஆண்டவர். விண்ணிலும் மண்ணிலும் நிறைந்திருப்பது நான் அல்லவா? என்கிறார் ஆண்டவர். | எரே 49:10 ஆதி 16:13 யோபு 22:13 யோபு 22:14 யோபு 24:13-16 சங் 10:11 சங் 90:8 சங் 139:7 சங் 139:11-16 நீதி 15:3 ஏசா 29:15 எசே 8:12 எசே 9:9 ஆமோ 9:2 ஆமோ 9:3 |
| 25 | என் பெயரால் பொய்யுரைக்கும் இறைவாக்கினர் “நான் கனவுகண்டேன், நான் கனவுகண்டேன்” என்று கூறியதைக் கேட்டேன். | எரே 8:6 எரே 13:27 எரே 16:17 எரே 29:23 சங் 139:2 சங் 139:4 லூக் 12:3 1கொரி 4:5 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 26 | பொய்யையும், தம் வஞ்சக எண்ணங்களையும் இறைவாக்காக உரைக்கும் இந்த இறைவாக்கினரின் மனப்பாங்கு என்று மாறுமோ? | எரே 4:14 எரே 13:27 சங் 4:2 ஓசி 8:5 அப் 13:10 |
| 27 | இவர்களுடைய மூதாதையர் பாகால் காரணமாக என் பெயரை மறந்தனர். அதுபோலத் தாங்கள் ஒருவர் ஒருவருக்குக் கூறும் கனவுகள் வழியாக என் மக்களின் நினைவிலிருந்து என் பெயரை அகற்றிவிடலாம் என நினைக்கின்றனர். | உபா 13:1-5 அப் 13:8 2தீமோ 2:17 2தீமோ 2:18 2தீமோ 3:6-8 |
| 28 | கனவு கண்ட இறைவாக்கினன் தன் கனவை எடுத்துச் சொல்லட்டும். என் சொல்லைத் தன்னிடத்தில் கொண்டிருப்பவனோ அதனை உண்மையோடு எடுத்துரைக்கட்டும். தாளைத் தானியத்தோடு ஒப்பிட முடியுமா? என்கிறார் ஆண்டவர். | நீதி 14:5 மத் 24:45 லூக் 12:42 1கொரி 4:2 2கொரி 2:17 1தீமோ 1:12 |
| 29 | என் சொல் தீயைப் போன்றது அல்லவா? பாதையை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றது அல்லவா? என்கிறார் ஆண்டவர். | எரே 5:14 எரே 20:9 லூக் 24:32 யோவா 6:63 அப் 2:3 அப் 2:37 2கொரி 2:16 2கொரி 10:4 2கொரி 10:5 எபிரெ 4:12 வெளிப் 11:5 |
| 30 | ஆகவே, ஒருவர் ஒருவரிடமிருந்து என் சொற்களைத் திருடும் இறைவாக்கினருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். | எரே 14:14 எரே 14:15 எரே 44:11 எரே 44:29 லேவி 20:3 லேவி 26:17 உபா 18:20 உபா 29:20 சங் 34:16 எசே 13:8 எசே 13:20 எசே 15:7 1பேது 3:12 |
| 31 | தங்கள் நாவினால் “ஆண்டவர் கூறுகிறார்” என்று உரைக்கும் இறைவாக்கினருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். | ஏசா 30:10 மீகா 2:11 |
| 32 | பொய்க் கனவுகனை இறைவாக்காக உரைப்போருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். இவர்கள் அவற்றை எடுத்துரைத்து, தங்கள் பொய்களாலும் மூடச்செயல்களாலும் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை: அவர்களுக்குக் கட்டளையிடவும் இல்லை, அவர்களால் இந்த மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை, என்கிறார் ஆண்டவர். | எரே 23:16 எரே 27:14-22 எரே 28:15-17 எரே 29:21-23 எரே 29:31-23 உபா 13:1-18 உபா 18:20 ஏசா 3:12 எசே 13:7-18 சகரி 13:2 சகரி 13:3 வெளிப் 19:20 |
| 33 | இந்த மக்களோ ஓர் இறைவாக்கினரோ ஒரு குருவோ உன்னிடம் “ஆண்டவரின் சுமை யாது?” என்று கேட்டால், “நீங்களே, அந்தச் சுமை: நான் உங்களைத் தள்ளவிடுவேன், என்கிறார் ஆண்டவர்” என்று சொல். | எரே 17:15 எரே 20:7 எரே 20:8 ஏசா 13:1 ஏசா 14:28 நாகூ 1:1 ஆபகூ 1:1 மல்கி 1:1 |
| 34 | “ஆண்டவரின் சுமை” என்று ஓர் இறைவாக்கினர் அல்லது குரு அல்லது மக்களில் யாராவது கூறினால், அந்த மனிதரையும் அவர் வீட்டாரையும் நான் தண்டிப்பேன். |
| 35 | “ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?” “ஆண்டவர் என்ன பேசினார்?” என்றே நீங்கள் உங்கள் உற்றார் உறவினரிடம் கேட்க வேண்டும். | எரே 31:34 எபிரெ 8:11 |
| 36 | “ஆண்வரின் சுமை” என்று இனி யாரும் குறிப்பிடக்கூடாது: அவனவன் சொல்லே அவனுக்குச் சுமை. வாழும் கடவுளும் படைகளின் ஆண்டவருமான நம் கடவுளின் சொற்களை நீங்கள் திரித்துக் கூறுகிறீர்கள். | சங் 12:3 சங் 64:8 சங் 120:3 சங் 149:9 நீதி 17:20 ஏசா 3:8 மத் 12:36 லூக் 19:22 2பேது 2:17 2பேது 2:18 யூதா 1:15 யூதா 1:16 |
| 37 | நீங்கள் இறைவாக்கினரிடம், “ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?”, “ஆண்டவர் என்ன பேசினார்?” என்றே கேட்கவேண்டும். |
| 38 | “ஆண்டவரின் சுமை” என்று நீங்கள் கூறுவீர்களானால், ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள். “ஆண்டவரின் சுமை” என்று நீங்கள் கூறக்கூடாது என்று நான் உங்களுக்குச் சொல்லியனுப்பியிருந்தும், நீங்கள் “ஆண்டவரின் சுமை” என்று கூறுகிறீர்கள். | 2நாளா 11:13 2நாளா 11:14 |
| 39 | ஆதலால், நான் உங்களை முற்றிலும் மறந்து, உங்களையும் உங்களுக்கும் உங்கள் மூதாதையருக்கும் நான் கொடுத்த நகரையும் என் முன்னிலையிலிருந்து தூக்கி வீசியெறிவேன். | ஆதி 6:17 லேவி 26:28 உபா 32:39 ஏசா 48:15 ஏசா 51:12 எசே 5:8 எசே 6:3 எசே 34:11 எசே 34:20 நீதி 13:13 ஓசி 4:6 ஓசி 5:14 |
| 40 | நீங்கள் என்றென்றும் வசைச் சொல்லுக்கு ஆளாவீர்கள். உங்கள் அவமானம் என்றென்றும் நிலைத்திருக்கும்: அது மறக்கப்படாது. | எரே 20:11 எரே 24:9 எரே 42:18 எரே 44:8-12 உபா 28:37 எசே 5:14 எசே 5:15 தானி 9:16 தானி 12:2 ஓசி 4:7 |