எசேக்கியேல் 20:32-35 - WCV
32
மேலும் மரத்தையும் கல்லையும் வழிபட்டு, “நாங்களும் வேற்றினத்தாரைப் போலவும், வேற்றுநாடுகளின் குடிமக்களைப் போலவும் இருப்போம்” என்று உங்கள் மனத்தில் எழும் எண்ணம் நிறைவேறப் போவதே இல்லை.
33
இது என் மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். வலிமைமிகு கையோடும், ஓங்கிய புயத்தோடும், வெளிப்படும் சினத்தோடும் நான் உங்களை ஆள்வேன்.
34
வலிமைமிகு கையோடும், ஓங்கிய புயத்தோடும், சீறிவரும் சினத்தோடும், பிற மக்களினங்களிடையே இருந்து உங்களை அழைத்து வந்து, நீங்கள் சிதறிக் கிடக்கும் நாடுகளிலிருந்து உங்களை ஒன்று சேர்ப்பேன்.
35
உங்களை வேற்றினத்தாரின் பாலைநிலத்துக்கு அழைத்துச்சென்று, அங்கே உங்களை நேருக்கு நேராய்த் தீர்ப்பிடுவேன்.