நாகூம் 1:3-6 - WCV
3
ஆண்டவர் விரைவில் சினம் கொள்ளார்: ஆனால் அவர் மிகுந்த ஆற்றலுள்ளவர். அவர் குற்றவாளிகளை எவ்வகையிலும் பழிவாங்காமல் விடமாட்டார். சுழற்காற்றிலும் புயற்காற்றிலும் அமைந்துள்ளது அவர் வழி: மேகங்கள் அவர்தம் காலடியில் எழுகின்ற புழுதிப்படலம்!
4
அவர் கடலை அதட்டி வற்றச் செய்கின்றார்: ஆறுகளையெல்லாம் வற்றிப்போகச் செய்கின்றார்: பாசானும் கர்மேலும் காய்ந்து போகின்றன: லெபனோனின் மலர்கள் வாடிப்போகின்றன.
5
அவர் முன்னிலையில் மலைகள் அதிர்கின்றன: குன்றுகள் கரைகின்றன: நிலமும் உலகும் அதில் குடியிருக்கும் அனைத்தும் அவர் முன்னிலையில் நடுநடுங்கின்றன.
6
அவரது கடும் சினத்தை எதிர்த்து நிற்கக்கூடியவன் யார்? அவர் கோபத்தீயின் முன் நிற்பவன் யார்? தீயைப்போல் அவரது கோபம் கொட்டுகின்றது: பாறைகளும் அவர்முன் தவிடு பொடியாகின்றன.