25
ஆதலால், ஆண்டவரின் சினத் தீ அவருடைய மக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது, அவர்களுக்கு எதிராக அவர் தம் கையை நீட்டி அவர்களை நொறுக்கினார். மலைகள் நடுநடுங்கின: அவர்களுடைய சடலங்கள் நடுத்தெருவில் நாதியற்றுக் குப்பை போல் கிடந்தன: இவையெல்லாம் நடந்தும் அவரது சீற்றம் தணியவில்லை. நீட்டிய சினக்கை இன்னும் மடங்கவில்லை.
26
அவர் தொலையிலுள்ள பிற இனத்துக்கு ஓர் அடையாளக் கொடியைக் காட்டியுள்ளார்: மண்ணுலகின் எல்லைகளிலிருந்து சீழ்க்கை ஒலியால் அதனை அழைத்துள்ளார், அந்த இனம் வெகுவிரைவாய் வந்து கொண்டிருக்கின்றது.
27
அவர்களுள் ஒருவனும் களைப்பபடையவில்லை: இடறி விழவில்லை: தூங்கவில்லை: உறங்கவுமில்லை: அவர்களில் யாருக்கேனும் இடுப்புக்கச்சை அவிழ்ந்து விழவில்லை: மிதியடிகளின் வாரேதும் அறுந்து போகவுமில்லை.
28
அவர்களுடைய அம்புகள் கூர்மையானவை: அவர்களுடைய விற்கள் நாணேற்றப்பட்டுள்ளன: அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கற்களைப்N பால் காட்சியளிக்கின்றன: அவர்களுடைய தேர்ச் சக்கரங்கள் சூறாவளிக் காற்றைப்போல் சுழல்கின்றன.