13
ஏனெனில் இத்தகையோர் போலித் திருத்தூதர்: வஞ்சக வேலையாள்கள்: கிறிஸ்துவின் திருத்தூதராக நடிப்பவர்கள்.
14
இதில் வியப்பு என்ன? சாத்தான் கூட ஒளியைச் சார்ந்த தூதனாக நடிக்கிறானே?
15
ஆகவே அவனுடைய தொண்டர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக நடிப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அவர்களது முடிவு அவர்களுடைய செயலுக்கு ஏற்பவே அமையும்.