அப்போது கடவுளின் அடியார் ஒருவர் இஸ்ரயேலின் அரசனை அணுகி, அவனிடம்,“ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: சிரியர், 'ஆண்டவர் மலைகளின் கடவுள்தான்: பள்ளத்தாக்குகளின் கடவுள் அல்லர்'. என்று நினைக்கின்றனர். எனவே இந்தப் பெரும் படை முழுவதையும் உன் கையில் ஒப்புவிப்பேன். நானே ஆண்டவர் என்று நீ அறிந்துகொள்வாய் “ என்று கூறினார்.