21
21”என் பெயரால் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து வரும் கோலயாவின் மகன் ஆகாபைக் குறித்தும், மாசேயாவின் மகன் செதேக்கியாவைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! நான் அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில் ஒப்புவிப்பேன். அவன் அவர்களை உங்கள் கண் முன்பாகவே வெட்டி வீழ்த்துவான்.
22
அவர்களுக்கு நேர்ந்ததை முன்னிட்டு, பாபிலோனுக்கு யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்டோர் அனைவரும் 'பாபிலோனிய மன்னன் நெருப்பில் போட்டுச் சுட்டெரித்த செதேக்கியாவைப் போலவும் ஆகாபைப் போலவும் ஆண்டவர் உன்னை ஆக்குவாராக' என்று சாபமிடுவர்.
23
ஏனெனில் அவர்கள் இஸ்ரயேலில் மதிகேடானதைச் செய்துள்ளார்கள்: பிறருடைய மனைவியரோடு விபசாரம் செய்துள்ளார்கள்: நான் அவர்களுக்கு ஆணையிடாதிருந்தும், அவர்கள் என் பெயரால் பொய்வாக்கு உரைத்துள்ளார்கள். நானோ இவற்றை எல்லாம் அறிவேன்: இவற்றுக்குச் சாட்சியும் நானே, என்கிறார் ஆண்டவர்.”