| 1 | ஆண்டவர் கூறுவது இதுவே: “யூதா அரசன் மாளிகைக்குச் செல். அங்கு இந்தச் செய்தியைச் சொல். | எரே 21:11 எரே 34:2 1சாமு 15:16-23 2சாமு 12:1 2சாமு 24:11 2சாமு 24:12 1இரா 21:18-20 2நாளா 19:2 2நாளா 19:3 2நாளா 25:15 2நாளா 25:16 2நாளா 33:10 ஓசி 5:1 ஆமோ 7:13 மாற் 6:18 லூக் 3:19 லூக் 3:20 |
| 2 | 'தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் யூதா அரசனே, நீயும் உன் அலுவலரும் இந்த வாயில்கள் வழியாகச் செல்லும் உன் மக்களும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்' என்று சொல். | எரே 22:29 எரே 13:18 எரே 17:20-27 எரே 19:3 எரே 29:20 1இரா 22:19 ஏசா 1:10 ஏசா 28:14 எசே 34:7 ஆமோ 7:16 |
| 3 | ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்ளுங்கள்: பறிகொடுத்தோரை கொடியோரிடமிருந்து விடுவியுங்கள்: அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதீர்கள்: அவர்களுக்குக் கொடுமை இழைக்காதீர்கள்: மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதீர்கள். | எரே 5:28 எரே 9:24 எரே 21:12 யாத் 23:6-9 லேவி 19:15 உபா 16:18-20 உபா 25:1 2சாமு 23:3 யோபு 29:7-17 சங் 72:2-4 மீகா 3:11 சகரி 7:9-11 |
| 4 | நீங்கள் உண்மையில் இவ்வாறு நடப்பீர்களாகில், தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள் இந்த அரண்மனை வாயில்கள் வழியாகச் செல்வார்கள்: தேர்களிலும் குதிரைகளிலும் ஏறிச் செல்வார்கள்: அவர்களோடு அவர்கள் அலுவலரும் மக்களும் செல்வார்கள். | எரே 17:25 |
| 5 | ஆனால் நீங்கள் இந்த வாக்கிற்குச் செவிகொடுக்காவிட்டால் இந்த அரண்மனை பாழ்பட்டுப்போகும் என என்மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன், என்கிறார் ஆண்டவர். | எரே 17:27 2நாளா 7:19 2நாளா 7:22 ஏசா 1:20 |
| 6 | யூதா அரச மாளிகைபற்றி ஆண்டவர் கூறுவது இதுவே: 'நீ எனக்குக் கிலயாதைப் போலவும், லெபனோனின் கொடுமுடி போலவும் இருக்கின்றாய்: ஆனால் நான் உன்னைப் பாழ் நிலமாகவும், குடியிருப்பாரற்ற நகராகவும் ஆக்குவேன். | எரே 22:24 எரே 21:11 ஆதி 37:25 உபா 3:25 உன்ன 5:15 |
| 7 | உன்னை அழிப்பதற்காக ஆள்களை ஏற்படுத்தியுள்ளேன்: அவர்கள் தம் ஆயுதங்களால் உன்னிடமுள்ள சிறந்த கேதுரு மரங்களை வெட்டித் தீயில் போடுவார்கள்.' | எரே 4:6 எரே 4:7 எரே 5:15 எரே 50:20-23 ஏசா 10:3-7 ஏசா 13:3-5 ஏசா 54:16 ஏசா 54:17 எசே 9:1-7 மத் 22:7 |
| 8 | இந்நகரைக் கடந்து செல்லும் பல பிற இனத்தார், 'இம்மாநகருக்கு ஆண்டவர் ஏன் இவ்வாறு செய்தார்?' என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வர். | உபா 29:23-25 1இரா 9:8 1இரா 9:9 2நாளா 7:20-22 புலம் 2:15-17 புலம் 4:12 தானி 9:7 |
| 9 | 'அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு அவற்றுக்கு ஊழியம் செய்ததால்தான் இவ்வாறு நேர்ந்தது' என்பர்.” | எரே 2:17-19 எரே 40:2 எரே 40:3 எரே 50:7 உபா 29:25-28 2இரா 22:17 2நாளா 34:25 |
| 10 | இறந்தவனைக் குறித்து அழ வேண்டாம்: அவனுக்காகப் புலம்ப வேண்டாம்: சென்றுவிட்டவனுக்காகக் கதறி அழுங்கள்: ஏனெனில் அவன் இனி திரும்பிவரப் போவதில்லை: தான் பிறந்த நாட்டைப் பார்க்கப் போவதில்லை. | 2இரா 22:20 2இரா 23:30 2நாளா 35:23-25 பிரச 4:2 ஏசா 57:1 புலம் 4:9 லூக் 23:28 |
| 11 | யூதா அரசனைப் பற்றி ஆண்டவர் கூறுவது இதுவே: தன் தந்தை யோசியாவுக்குப் பதிலாக ஆட்சி செய்து வந்தான். அவன் இந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டான்: இனி இங்குத் திரும்பி வரமாட்டான். | 1நாளா 3:15 2நாளா 28:12 2நாளா 34:22 2நாளா 36:1-4 |
| 12 | அவன் நாடுகடத்தப்பட்ட இடத்திலேயே சாவான். இந்த நாட்டை இனி ஒருபோதும் பாரான். | எரே 22:18 2இரா 23:34 |
| 13 | நீதியின்றித் தன் மாளிகையையும், நேர்மையின்றித் தன் மாடியறைகளையும் கட்டுகின்றவனுக்கு ஐயோ கேடு! அடுத்திருப்பாரை ஊதியமின்றி உழைக்கச் செய்கிறான். அவருக்குக் கூலி கொடுப்பதில்லை. | எரே 22:18 2இரா 23:35-37 2நாளா 36:4 |
| 14 | “நான் பெரியதொரு மாளிகையையும் காற்றோட்டமான மாடியறைகளையும் கட்டிக்கொள்வேன்” என்கிறான். அதற்குப் பலகணிகளை அமைத்துக் கொள்கின்றான். கேதுரு பலகைகளால் அதனை அணி செய்து அதற்குச் செவ்வண்ணம் தீட்டுகின்றான். | நீதி 17:19 நீதி 24:27 ஏசா 5:8 ஏசா 5:9 ஏசா 9:9 தானி 4:30 மல்கி 1:4 லூக் 14:28 லூக் 14:29 |
| 15 | கேதுரு மரங்களின் சிறப்பில்தான் உன் அரச பெருமை அடங்கியிருக்கின்றதா? உன் தந்தை உண்டு குடித்து மகிழ்ந்தாலும், நீதி நேர்மையுடன் நடந்தானே! அவனைப் பொறுத்தவரையில் எல்லாம் நலமாய் இருந்ததே! | எரே 22:18 2இரா 23:25 1நாளா 3:15 |
| 16 | ஏழை எளியோரின் வழக்கில் அவன் நீதி வழங்கினான். எல்லாம் நலமாய் இருந்தது. என்னை அறிதல் என்பது இதுதானே! என்கிறார் ஆண்டவர். | எரே 5:28 யோபு 29:12-17 சங் 72:1-4 சங் 72:12-4 சங் 72:13-4 சங் 82:3 சங் 82:4 சங் 109:31 நீதி 24:11 நீதி 24:12 ஏசா 1:17 |
| 17 | நீயோ நேர்மையின்றி வருவாய் சேர்ப்பிலும் மாசற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும் ஒடுக்கித் துன்புறுத்துவதிலும்தான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறாய். | யோசு 7:21 யோபு 31:7 சங் 119:36 சங் 119:37 எசே 19:6 எசே 33:31 மாற் 7:21 மாற் 7:22 யாக் 1:14 யாக் 1:15 2பேது 2:14 1யோவா 2:15 1யோவா 2:16 |
| 18 | ஆகவே யூதாவின் அரசனும் யோசியாவின் மகனுமாகிய யோயாக்கிமைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: “ஐயோ என் சகோதரனே! ஐயோ சகோதரியே!” என்று அவனுக்காக யாரும் ஒப்பாரி வைக்கமாட்டார்கள். 'ஐயோ என் தலைவரே! மாண்பு மிக்கவரே!' என்று அழமாட்டார்கள். | எரே 22:10 எரே 16:4 எரே 16:6 2நாளா 21:19 2நாளா 21:20 2நாளா 35:25 |
| 19 | ஒரு கழுதைக்குரிய அடக்கமே அவனுக்குக் கிடக்கும் அவனை இழுத்து எருசலேமின் வாயில்களுக்கு வெளியே எறிவர். | எரே 15:3 எரே 36:6 எரே 36:30 1இரா 14:10 1இரா 21:23 1இரா 21:24 2இரா 9:35 2நாளா 36:6 |
| 20 | லெபனோன்மேல் ஏறிக் கதறியழு! பாசானில் அழுகைக்குரல் எழுப்பு! அபாரிமில் ஓலமிடு! ஏனெனில், உன் அன்பர்கள் அனைவரும் நொறுக்கப்பட்டார்கள். | எரே 2:36 எரே 2:37 எரே 30:13-15 2இரா 24:7 ஏசா 20:5 ஏசா 20:6 ஏசா 30:1-7 ஏசா 31:1-3 |
| 21 | நீ நலமாய் இருந்த காலத்தில் உன்னோடு பேசினேன்: நியோ “நான் செவிசாய்க்க மாட்டேன்” என்றாய்: உன் இளமையிலிருந்து இதுவே உன் வழிமுறை: எனது குரலுக்கு நீ செவிகொடுக்கவே இல்லை. | எரே 2:31 எரே 6:16 எரே 35:15 எரே 36:21-26 2நாளா 33:10 2நாளா 36:16 2நாளா 36:17 நீதி 30:9 |
| 22 | உன் மேய்ப்பர்களைக் காற்றே மேய்க்கும்: உன் அன்பர்கள் நாடுகடத்தப்படுவர்: அப்போது நீ வெட்கமுறுவாய். உன் தீச்செயல்களைக் குறித்து மானக்கேடு அடைவாய். | எரே 4:11-13 எரே 30:23 எரே 30:24 ஏசா 64:6 ஓசி 4:19 ஓசி 13:15 |
| 23 | லெபனோனில் குடிகொண்டுள்ள நீ, கேதுரு மரங்களுள் கூடுகட்டியிருக்கும் நீ, பேறுகால பேதனை போன்ற துன்பம் வரும்போது, எவ்வாறு புலம்பி அழப்போகின்றாய்? | எரே 22:6 சகரி 11:1 சகரி 11:2 |
| 24 | ஆண்டவர் கூறுவது: என்மேல் ஆணை! யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான கோனியாவே, நீ என் வலக்கை முத்திரை மோதிரம் போல் இருந்தாலும், நான் உன்னைக் கழற்றி எறிந்து விடுவேன். | எரே 22:28 எரே 37:1 2இரா 24:6-8 |
| 25 | உன் உயிரைப் பறிக்கத் தேடுவோரின் கையில், நீ அஞ்சுகின்றவர்களின் கையில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில், கல்தேயரின் கையில் உன்னை ஒப்புவிப்பேன். | எரே 22:28 எரே 21:7 எரே 34:20 எரே 34:21 எரே 38:16 2இரா 24:15 2இரா 24:16 |
| 26 | உன்னையும் உன்னைப் பெற்றெடுத்த அன்னையையும் இன்னொரு நாட்டுக்குத் தூக்கியெறிவேன். நீங்கள் பிறவாத அந்த நாட்டில் இறப்பீர்கள். | எரே 15:2-4 2இரா 24:15 2நாளா 36:9 2நாளா 36:10 ஏசா 22:17 எசே 19:9-14 |
| 27 | எந்த நாட்டுக்குத் திரும்பிவர அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்களோ, அந்த நாட்டிற்குத் திரும்பி வரவே மாட்டார்கள். | எரே 22:11 எரே 44:14 எரே 52:31-34 2இரா 25:27-30 |
| 28 | கோனியா என்னும் இம்மனிதன் அவமதிப்புக்குள்ளான் உடைந்த ஒரு பானையோ? யாரும் விரும்பாத ஒரு மண்கலமோ? அவனும் அவன் வழி மரபினரும் ஏன் தூக்கி எறியப்பட்டார்கள்? முன்பின் தெரியாத நாட்டுக்கு ஏன் துரத்தப்பட்டார்கள்? | எரே 48:38 1சாமு 5:3-5 2சாமு 5:21 சங் 31:12 ஓசி 8:8 ஓசி 13:15 ரோம 9:21-23 2தீமோ 2:20 2தீமோ 2:21 |
| 29 | நாடே! நாடே! நாடே! ஆண்டவரின் வாக்கைக் கேள். | எரே 6:19 உபா 4:26 உபா 31:19 உபா 32:1 ஏசா 1:1 ஏசா 1:2 ஏசா 34:1 மீகா 1:2 மீகா 6:1 மீகா 6:2 |
| 30 | ஆண்டவர் கூறுவது இதுவே: “இந்த ஆள் மகப் பேறற்றவன்: தன் வாழ்நாளில் வெற்றி காணாதவன்” என எழுது. ஏனெனில் அவன் வழி மரபினர் யாரும் வெற்றி அடையமாட்டார்கள்: யாரும் தாவீதின் அரியணையில் வீற்றிருந்து யூதாவின்மேல் ஆட்சி புரிய மாட்டார்கள். | 1நாளா 3:16 1நாளா 3:17 மத் 1:12-16 |