2நாளாகமம் 35:23-25 - WCV
23
அரசர் யோசியாவின் மேல் வில்வீரர் அம்பெய்ய, அவர் தம் அலுவலர்களைப் பார்த்து,‘என்னை உடனே அப்புறப்படுத்துங்கள், ஏனெனில் நான் பெரிதும் காயமடைந்துள்ளேன் ‘ என்றார்.
24
அவருடைய அலுவலர்கள் அவரைத் தேரிலிருந்து இறக்கி, அவரது இரண்டாம் தேரில் ஏற்றி, எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். அவர் அங்கே இறக்க, தம் மூதாதையரின் கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டார். யோசியாவுக்காக யூதா, எருசலேம் முழுவதும் துக்கம் கொண்டாடியது.
25
யோசியாவுக்காக எரேமியாவும் ஓர் இரங்கற்பா இயற்றினார். அது எல்லாப் பாடகர், பாடகியராலும், அவருக்காகப் புலம்பும் பொழுது இன்றுவரை பாடப்படுகிறது. இது, இஸ்ரயேலில் நிலையான நியமமாகி, புலம்பல் பற்றிய நூலில் காணக்கிடக்கிறது.