9
அவர்கள் அதனைச் சங்கிலிகளால் கட்டி, கூண்டிலடைத்து, பாபிலோனின் மன்னனிடம் கொண்டு வந்தனர். இனியும் அதன் கர்ச்சனை இஸ்ரயேல் மலைகளின் மீது ஒலிக்காதபடி அரண்களுக்குள் அதனை அடைத்து வைத்தனர்.
10
திராட்சைத் தோட்டத்தில் நீரருகே நடப்பட்ட திராட்சைக் கொடிபோல் இருந்தாள் உன் தாய்: மிகுந்த நீர்வளத்தின் காரணத்தால் அது கிளைகளும் கனிகளுமாகத் தழைத்திருந்தது.
11
அரச செங்கோலுக்கேற்ற உறுதியான கிளைகள் அதற்கிருந்தன: அடர்ந்த கிளைகள் நடுவே அது உயர்ந்தோங்கிற்று. திரளான கிளைகளோடு அது உயர்ந்து தென்பட்டது.
12
ஆனால், அது சினத்தோடு பிடுங்கப்பட்டு தலையிலே எறியப்பட்டது: கீழைக் காற்றினால் அது காய்ந்து போனது: அதன் கனி உதிர்ந்து போயிற்று: தண்டு உலாந்து தீக்கிரையாயிற்று.
13
இப்போதோ, அது பாலை நிலத்தில், வறண்ட, நீரற்ற நிலப்பரப்பில் நடப்பட்டுள்ளது.
14
அதன் தண்டிலிருந்து நெருப்பு கிளம்பி அதன் கிளைகளையும் கனிகளையும் சுட்டெரித்தது: அரச செங்கோலாயிருக்கத்தக்க உறுதியான தண்டு இனி அதில் தோன்றாது. இதுவே புலம்பல்: இதனை இரங்கற்பாவவெனக் கொள்க.