2
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!
3
மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்: குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.
4
எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக: பிறரை ஒடுக்குவோரை நொறுக்கி விடுவாராக!