எப்ராயிம் தன் சகோதரருள் கனி தரும் மரம் போலிருக்கலாம்: ஆயினும் ஆண்டவரின் மூச்சாகிய கீழைக்காற்று பாலை நிலத்திலிருந்து கிளம்பி வரும்: வந்து அவனுடைய நீரோடைகளையும், நீரூற்றுகளையும் வறண்டு போகச் செய்யும். அவனது கருவூலத்திலிருந்து விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு போகும்.