6
உன்னைச் சார்ந்துள்ள எளியவரின் வழக்கில் நீதியைத் திரித்து விடாதே.
7
தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து விலகியிரு.குற்றமற்றவரையும், நேர்மையாளரையும் கொலை செய்ய வேண்டாம்.ஏனெனில், தீயவரை நல்லவராக நான் தீர்ப்பிடவே மாட்டேன்.
8
கையூட்டு வாங்காதே.கையூட்டு, பார்வையுடையவரையும் குருடராக்கும்.நேர்மையாளரின் வழக்கையும் புரட்டிவிடும்.
9
அன்னியரை நீ ஒடுக்காதே. அன்னியரது உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராக இருந்தீர்கள்.