எரேமியா 4:11-13 - WCV
11
அக்காலத்தில் இம்மக்களுக்கும் எருசலேமுக்கும் இவ்வாறு கூறப்படும்: பாலை நிலத்தின் மொட்டை மேடுகளிலிருந்து அனல்காற்று என் மகளாகிய மக்கள்மீது வீசும். அது தூற்றுவதற்கும் தூய்மைப்படுத்துவதற்குமான காற்றன்று.
12
அதைவிடப் பெரும் காற்று ஒன்று என்னிடமிருந்து வருகின்றது. இப்போது நானே அவர்கள் மேல் தண்டனைத் தீர்ப்பு வழங்கப் போகிறேன்.
13
இதோ, மேகங்களைப் போல் எதிரி வருகிறேன். அவன் தேர்கள் சூறாவளி போன்றவை: அவன் குதிரைகள் கழுகுகளைவிட விரைவாகச் செல்பவை: நமக்கு ஐயோ கேடு! நாம் அழிந்தோம்.