எரேமியா 50:20-23 - WCV
20
அந்நாள்களில் - அக்காலத்தில் - இஸ்ரயேலில் குற்றத்தை தேடிப் பார்ப்பர்: ஆனால், ஒன்றும் தென்படாது. யூதாவில் பாவங்களைத் தேடுவர்: ஆனால் ஒன்றும் காணப்படாது. ஏனெனில் நான் விட்டுவைத்த எஞ்சியோரை மன்னிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
21
மெரத்தாயிம் நாட்டுக்கு எதிராகப் புறப்படு: பெக்கோதின் குடிகளை எதிர்த்துமுன்னேறு: அவர்களை வெட்டி வீழ்த்து: முற்றிலும் அழித்துப்போடு: நான் கட்டளையிட்ட அனைத்தையும் நிறைவேற்று, என்கிறார் ஆண்டவர்.
22
நாட்டில் போரின் ஆரவாரம் கேட்கின்றது: பேரழிவின் கூக்குரல் ஒலிக்கின்றது.
23
மண்ணுலகு முழுவதற்கும் சம்மட்டியாய்த் திகழ்ந்தது நொறுங்கித் தூள்தூளானது எப்படி! மக்களினங்கள் நடுவே பாபிலோன் பாழடைந்துபோனது எவ்வாறு!