| 1 | “ஆறுதல் கூறுங்கள்: என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள். | ஏசா 3:10 ஏசா 35:3 ஏசா 35:4 ஏசா 41:10-14 ஏசா 41:27-14 ஏசா 49:13-16 ஏசா 50:10 ஏசா 51:3 ஏசா 51:12 ஏசா 57:15-19 ஏசா 60:1-22 ஏசா 61:1-3 ஏசா 62:11 ஏசா 62:12 ஏசா 65:13 ஏசா 65:14 ஏசா 66:10-14 நெகே 8:10 சங் 85:8 எரே 31:10-14 செப் 3:14-17 சகரி 1:13 சகரி 9:9 2கொரி 1:4 1தெச 4:18 எபிரெ 6:17 எபிரெ 6:18 |
| 2 | எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்: அவள் போராட்டம் நின்றுவிட்டது: அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது: அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள். | ஆதி 34:3 2நாளா 30:22 ஓசி 2:14 |
| 3 | குரலொளி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். | மத் 3:1-3 மாற் 1:2-5 லூக் 3:2-6 யோவா 1:23 |
| 4 | பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்: கோணலானது நேராக்கப்படும்: கரடு முரடானவை சமதளமாக்கப்படும். | ஏசா 42:11 ஏசா 42:15 ஏசா 42:16 1சாமு 2:8 சங் 113:7 சங் 113:8 எசே 17:24 எசே 21:26 லூக் 1:52 லூக் 1:53 லூக் 3:5 லூக் 18:14 |
| 5 | ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்: மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்: ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். | ஏசா 6:3 ஏசா 11:9 ஏசா 35:2 ஏசா 60:1 சங் 72:19 சங் 96:6 சங் 102:16 ஆபகூ 2:14 லூக் 2:10-14 யோவா 1:14 யோவா 12:41 2கொரி 3:18 2கொரி 4:6 எபிரெ 1:3 வெளிப் 21:23 |
| 6 | “உரக்கக் கூறு” என்றது ஒரு குரல்: “எதை நான் உரக்கக் கூற வேண்டும்?” என்றேன். “மானிடர் அனைவரும் புல்லே ஆவர்: அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே! | ஏசா 40:3 ஏசா 12:6 ஏசா 58:1 ஏசா 61:1 ஏசா 61:2 எரே 2:2 எரே 31:6 ஓசி 5:8 |
| 7 | ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்துபோம்: பூ வதங்கிவிழும்: உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! |
| 8 | புல் உலர்ந்துபோம்: பூ வதங்கி விழும்: நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். | ஏசா 46:10 ஏசா 46:11 ஏசா 55:10 ஏசா 55:11 சங் 119:89-91 சகரி 1:6 மத் 5:18 மத் 24:35 மாற் 13:31 யோவா 10:35 யோவா 12:34 ரோம 3:1-3 1பேது 1:25 |
| 9 | சீயோனே! நற்செசய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! | ஏசா 41:27 ஏசா 52:7 எஸ்றா 1:1 எஸ்றா 1:2 லூக் 24:47 ரோம 10:18 |
| 10 | இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்: அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்: அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. | ஏசா 9:6 ஏசா 9:7 ஏசா 59:15-21 ஏசா 60:1-22 சகரி 2:8-11 மல்கி 3:1 யோவா 12:13 யோவா 12:15 |
| 11 | ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்: ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்: அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்: சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.” | ஏசா 49:9 ஏசா 49:10 ஏசா 63:11 ஆதி 49:24 சங் 23:1-6 சங் 78:71 சங் 78:72 சங் 80:1 எசே 34:12-14 எசே 34:23 எசே 34:31 எசே 37:24 மீகா 5:4 யோவா 10:11-16 எபிரெ 13:20 1பேது 2:25 1பேது 5:4 வெளிப் 7:17 |
| 12 | கடல்நீரைத் தம் உள்ளங்கை அளவால் கணக்கிட்டவர் யார்? வானத்தைச் சாண் அளவால் கணித்திட்டவர் யார்? மண்ணுலகின் புழுதியை மரக்காலால் அளந்தவர் யார்? மலைகளை நிறைகோலாலும் குன்றுகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்? | ஏசா 48:13 யோபு 11:7-9 யோபு 38:4-11 சங் 102:25 சங் 102:26 சங் 104:2 சங் 104:3 நீதி 8:26-28 நீதி 30:4 எபிரெ 1:10-12 வெளிப் 20:11 |
| 13 | ஆண்டவரின் ஆவிக்கு வழிகாட்டியவர் யார்? அவருக்கு அறிவுரையாளனாய் இருந்து கற்றுத்தந்தவர் யார்? | யோபு 21:22 யோபு 36:22 யோபு 36:23 லூக் 10:22 யோவா 1:13 ரோம 11:34 1கொரி 2:16 எபே 1:11 |
| 14 | யாரிடம் அவர் அறிவுரை கேட்டார்? அவருக்குப் பயிற்சி அளித்து, நீதிநெறியை உணர்த்தியர் யார்? அவருக்கு அறிவு புகட்டி, விவேக நெறியைக் காட்டியவர் யார்? | 1கொரி 12:4-6 கொலோ 2:3 யாக் 1:17 |
| 15 | இதோ, வேற்றினத்தார், வாளியிலிருக்கும் நீர்த்துளியாகவும், தராசில் ஒட்டிய தூசாகவும் அவரால் கருதப்படுகின்றனர். இதோ, தீவுகளை ஓர் அணுவென அவர் தூக்குகின்றார். | ஏசா 40:22 யோபு 34:14 யோபு 34:15 எரே 10:10 |
| 16 | எரிப்பதற்கு லெபனோன் போதாது: எரிபலிக்கு அதன் விலங்குகள் பற்றாது. | சங் 40:6 சங் 50:10-12 மீகா 6:6 மீகா 6:7 எபிரெ 10:5-10 |
| 17 | மக்களினங்கள் யாவும் இல்லாமையாக, ஒன்றுமில்லாமையாக, வெறுமையாக அவரால் கருதப்படுகின்றன. | யோபு 25:6 சங் 62:9 தானி 4:34 தானி 4:35 2கொரி 12:11 |
| 18 | இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு நிகராகக் கொள்வீர்கள்? | ஏசா 40:25 ஏசா 46:5 ஏசா 46:9 யாத் 8:10 யாத் 9:14 யாத் 15:11 யாத் 20:4 உபா 33:26 1சாமு 2:2 யோபு 40:9 சங் 86:8-10 சங் 89:6 சங் 89:8 சங் 113:5 எரே 10:6 எரே 10:16 மீகா 7:18 அப் 17:29 கொலோ 1:15 எபிரெ 1:3 |
| 19 | சிலை வடிவத்தையா? அதைச் சிற்பி வார்க்கிறான்: பொற்கொல்லன் அதைப் பொன்னால் வேய்கிறான்: வெள்ளிச் சங்கிலிகளை அதற்கென அமைக்கிறான். | ஏசா 37:18 ஏசா 37:19 ஏசா 41:6 ஏசா 41:7 ஏசா 44:10-12 ஏசா 46:6 ஏசா 46:7 யாத் 32:2-4 நியா 17:4 சங் 115:4-8 சங் 135:15 சங் 135:18 எரே 10:3-5 எரே 10:9-5 ஓசி 8:6 ஆபகூ 2:18 ஆபகூ 2:19 |
| 20 | இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்ற இயலா வறியவயன் உளுத்துப்போகா மரத்தைத் தேர்ந்து கொள்கிறான்: அசைக்க முடியாச் சிலையொன்றை நிறுவ அவன் கைவினைஞனைத் தேடுகிறான். | ஏசா 2:8 ஏசா 2:9 ஏசா 44:13-19 எரே 10:3 எரே 10:4 தானி 5:23 |
| 21 | உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் கேள்விப்படவில்லையா? தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு அறிவிக்கப்படவில்லையா? மண்ணுலகின் அடித்தளங்கள் இடப்பட்டதுபற்றி நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா? | ஏசா 27:11 ஏசா 44:20 ஏசா 46:8 சங் 19:1-5 சங் 115:8 எரே 10:8-12 அப் 14:17 ரோம 1:19-21 ரோம 1:28-21 ரோம 3:1 ரோம 3:2 |
| 22 | உலகின் விதானத்தின் மீது வீற்றிருப்பவர் அவரே: மண்ணில் வாழ்வோர் வெட்டுக்கிளி போல்வர்: வான் வெளியைத் திரைச் சீலையென விரித்துக் குடியிருக்கும் கூடாரம்போல் அதை அமைப்பவரும் அவரே. | ஏசா 19:1 ஏசா 66:1 சங் 2:4 சங் 29:10 சங் 68:33 |
| 23 | ஆள்வோரை வீழ்த்துபவர் அவரே: மண்ணுலகின் தலைவர்களை ஒன்றுமில்லாது ஆக்குபவர் அவரே. | ஏசா 19:13 ஏசா 19:14 ஏசா 23:9 ஏசா 24:21 ஏசா 24:22 யோபு 12:21 யோபு 34:19 யோபு 34:20 சங் 76:12 சங் 107:40 எரே 25:18-27 லூக் 1:51 லூக் 1:52 வெளிப் 19:18-20 |
| 24 | அவர்கள் நடப்படுகிறார்கள்: விதைக்கப்படுகிறார்கள்: ஆனால் அவர்களின் தண்டு நிலத்தில் வேர்விடுவதற்குள், அவர்கள்மேல் அவர் ஊத, அவர்கள் வாடிவதங்குகின்றனர். சூறைக்காற்று அவர்களைத் துரும்பென அடித்துச் செல்கிறது. | ஏசா 14:21 ஏசா 14:22 ஏசா 17:11 1இரா 21:21 1இரா 21:22 2இரா 10:11 யோபு 15:30-33 யோபு 18:16-19 எரே 22:30 நாகூ 1:14 |
| 25 | “யாருக்கு என்னை ஒப்பிடுடவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?” என்கிறார் தூயவர். | ஏசா 40:18 உபா 4:15-18 உபா 4:33-18 உபா 5:8 |
| 26 | உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்: அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை. | ஏசா 51:6 உபா 4:19 யோபு 31:26-28 சங் 8:3 சங் 8:4 சங் 19:1 |
| 27 | “என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது: என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை” என்று யாக்கோபே, நீ செல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்? |
| 28 | உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றுமுள கடவுள்: அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்: அவர் சோர்ந்து போகார்: களைப்படையார்: அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. | எரே 4:22 மாற் 8:17 மாற் 8:18 மாற் 9:19 மாற் 16:14 லூக் 24:25 யோவா 14:9 1கொரி 6:3-5 1கொரி 6:9-5 1கொரி 6:16 1கொரி 6:19 |
| 29 | அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்: வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார். | ஏசா 41:10 ஆதி 49:24 உபா 33:25 சங் 29:11 சகரி 10:12 2கொரி 12:9 2கொரி 12:10 பிலிப் 4:13 கொலோ 1:11 எபிரெ 11:34 |
| 30 | இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்: வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். | ஏசா 9:17 ஏசா 13:18 சங் 33:16 சங் 34:10 சங் 39:5 பிரச 9:11 ஆமோ 2:14 |
| 31 | ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்: அவர்கள் ஓடுவர்: களைப்படையார்: நடந்து செல்வர்: சோர்வடையார். | ஏசா 8:17 ஏசா 25:9 ஏசா 30:18 சங் 25:3 சங் 25:5 சங் 25:21 சங் 27:14 சங் 37:34 சங் 40:1 சங் 84:7 சங் 92:1 சங் 92:13 சங் 123:2 புலம் 3:25 புலம் 3:26 ரோம 8:25 1தெச 1:10 |