| 1 | தீவுகளே, என் திருமுன்னே மௌனமாயிருங்கள்: மக்களினங்கள் தம் ஆற்றலைப் புதுப்பிப்பார்களாக! அருகில் வந்து பேசுவார்களாக! நீதித்தீர்ப்புக்காக நாம் ஒருங்கே கூடிவருவோமாக! | ஏசா 49:1 சங் 46:10 ஆபகூ 2:20 சகரி 2:13 |
| 2 | சென்றவிடமெல்லாம் சிறப்புறும் நேர்மையாளனைக் கிழக்கிலிருந்து எழும்பச் செய்தவர் யார்? மக்களினங்களை அவனிடம் கையளித்து அரசர்களை அவனுக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்? அவன் வாள் அவர்களைப் புழுதியாக்குகிறது: அவன் வில் அவர்களைப் பதர்போல் பறக்கச் செய்கிறது. | ஏசா 41:25 ஏசா 45:13 ஏசா 46:11 ஆதி 11:31 ஆதி 12:1-3 ஆதி 17:1 எபிரெ 11:8-10 |
| 3 | அவன் அவர்களைத் துரத்திச் செல்கின்றான்: எதிர்ப்பு எதுவுமின்றி முன்னேறுகின்றான்: பாதை வழியே காலடி படாது செல்கின்றான். | ஏசா 57:2 யோபு 5:24 |
| 4 | இவற்றைச்செய்து முடித்தவர் யார்? தொடக்கத்திலிருந்தே தலைமுறைகளை அழைத்தவரன்றோ! ஆண்டவராகிய நானே முதலானவர்! முடிவானவற்றுடன் இருக்கப் போவதும் நானே! | ஏசா 41:26 ஏசா 40:12 ஏசா 40:26 ஏசா 42:24 |
| 5 | தீவு நாட்டினர் அதைப் பார்த்து அஞ்சினர்: உலகின் எல்லைகளில் வாழ்வோர் நடுநடுங்கினர்: எனவே அவர்கள் ஒருங்கே கூடி வந்தனர். | ஆதி 10:5 எசே 26:15 எசே 26:16 |
| 6 | ஒவ்வொருவரும் தம் அடுத்தவருக்கு உதவி செய்கின்றார்: தம் அடுத்தவரிடம், 'திடன்கொள்' என்கின்றார். | ஏசா 40:19 ஏசா 44:12 1சாமு 4:7-9 1சாமு 5:3-5 தானி 3:1-7 அப் 19:24-28 |
| 7 | கைவினைஞர் பொற்கொல்லருக்கு ஊக்கமூட்டுகின்றார்: சுத்தியலால் தட்டுபவர் சம்மட்டியால் அடிப்பவரிடம், பற்றவைப்பதுபற்றி, “நன்று” என்று சொல்லி உற்சாகப்படுத்துகின்றார்: அசையாதபடி ஆணிகளால் அதை இறுக்குகின்றார். | ஏசா 40:19 ஏசா 44:12-15 ஏசா 46:6 ஏசா 46:7 எரே 10:3-5 எரே 10:9-5 தானி 3:1-7 |
| 8 | நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே! நான் தெரிந்தெடுத்த யாக்கோபே! என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே! | ஏசா 43:1 ஏசா 44:1 ஏசா 44:2 ஏசா 44:21 ஏசா 48:12 ஏசா 49:3 யாத் 19:5 யாத் 19:6 லேவி 25:42 உபா 7:6-8 உபா 10:15 உபா 14:2 சங் 33:12 சங் 105:6 சங் 105:42-45 சங் 135:4 எரே 33:24 |
| 9 | உலகின் எல்லைகளினின்று உன்னை அழைத்து வந்தேன்: தொலைநாடுகளினின்று உன்னை அழைத்தேன்: “நீ என் அடியவன்: நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்: உன்னை நான் தள்ளிவிடவில்லை” என்று சொன்னேன். | ஏசா 41:2 யோசு 24:2-4 நெகே 9:7-38 சங் 107:2 சங் 107:3 லூக் 13:29 வெளிப் 5:9 |
| 10 | அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்: கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்: உதவி செய்வேன்: என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன். | ஏசா 41:13 ஏசா 41:14 ஏசா 12:2 ஏசா 43:1 ஏசா 43:5 ஏசா 44:2 ஏசா 51:12 ஏசா 51:13 ஆதி 15:1 உபா 20:1 உபா 31:6-8 யோசு 1:9 2நாளா 20:17 2நாளா 32:8 சங் 27:1 சங் 46:1 சங் 46:2 சங் 46:7 சங் 46:11 லூக் 1:13 லூக் 1:30 லூக் 2:10 லூக் 2:11 ரோம 8:31 |
| 11 | உனக்கெதிராய் வெகுண்டெழுவோர் அனைவரும் மானக்கேடுற்று இழிநிலை அடைவர்: உன்னை எதிர்த்து வழக்காடுவோர் இல்லாதொழிவர். | ஏசா 45:24 ஏசா 49:26 ஏசா 54:17 ஏசா 60:12-14 யாத் 11:8 யாத் 23:22 சகரி 12:3 அப் 13:8-11 அப் 16:39 வெளிப் 3:9 |
| 12 | உன்னை எதிர்த்துப் போராடியோரை நீ தேடுவாய்: ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்: உன்னை எதிர்த்துப் போரிட்டோர் ஒழிந்து போவர். | யோபு 20:7-9 சங் 37:35 சங் 37:36 |
| 13 | ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, “அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்” என்று உன்னிடம் சொல்பவரும் நானே. | ஏசா 43:6 ஏசா 45:1 ஏசா 51:18 உபா 33:26-29 சங் 63:8 சங் 73:23 சங் 109:31 2தீமோ 4:17 |
| 14 | “யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு: நான் உனக்குத் துணையாய் இருப்பேன்,” என்கிறார் ஆண்டவர். | யோபு 25:6 சங் 22:6 |
| 15 | இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்: குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய். | ஏசா 21:10 ஏசா 28:27 ஆபகூ 3:12 |
| 16 | அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்: புயல் அவற்றைச் சிதறடிக்கும்: ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்: இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய். | ஏசா 17:13 சங் 1:4 எரே 15:7 எரே 51:2 மத் 3:12 |
| 17 | ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்: அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்: ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்: இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். | ஏசா 61:1 ஏசா 66:2 சங் 68:9 சங் 68:10 சங் 72:12 சங் 72:13 சங் 102:16 சங் 102:17 மத் 5:3 |
| 18 | பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்: பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்: பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன். | ஏசா 12:3 ஏசா 30:25 ஏசா 32:2 ஏசா 35:6 ஏசா 35:7 ஏசா 43:19 ஏசா 43:20 ஏசா 44:3 ஏசா 48:21 ஏசா 49:9 ஏசா 49:10 ஏசா 58:11 சங் 46:4 சங் 78:15 சங் 78:16 சங் 105:41 சங் 107:35 எசே 47:1-8 யோவே 3:18 சகரி 14:8 வெளிப் 7:17 வெளிப் 22:1 |
| 19 | பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்: சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்: பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன். | ஏசா 27:6 ஏசா 32:15 ஏசா 37:31 ஏசா 37:32 ஏசா 51:3 ஏசா 55:13 ஏசா 60:21 ஏசா 61:3 ஏசா 61:11 சங் 92:13 சங் 92:14 எசே 17:22-24 எசே 47:12 |
| 20 | அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச்செய்தார் என்றும் இஸ்ரயேலின்”தூயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்: ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர். | ஏசா 43:7-13 ஏசா 43:21-13 ஏசா 44:23 ஏசா 45:6-8 ஏசா 66:18 யாத் 9:16 எண் 23:23 யோபு 12:9 சங் 109:27 எபே 2:6-10 2தெச 1:10 |
| 21 | 21”உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள்” என்கிறார் ஆண்டவர். “உங்கள் ஆதாரங்களை எடுத்துரையுங்கள்”, என்கிறார் யாக்கோபின் அரசர். | யோபு 23:3 யோபு 23:4 யோபு 31:37 யோபு 38:3 யோபு 40:7-9 மீகா 6:1 மீகா 6:2 |
| 22 | அத்தெய்வங்கள் அருகில் வந்து, நிகழப்போவதை நமக்கு அறிவிக்கட்டும்: முன்னே நடந்தவற்றை எடுத்துரைக்கட்டும்: நாம் சிந்தித்து அவற்றின் இறுதி விளைவை அறிந்து கொள்வோம்: இல்லாவிடில் வரவிருப்பவற்றை நமக்கு எடுத்துக்கூறட்டும். | ஏசா 42:9 ஏசா 43:9-12 ஏசா 45:21 ஏசா 48:14 யோவா 13:19 யோவா 16:14 |
| 23 | 23”நீங்கள் தெய்வங்கள் என நாங்கள் உணரும்பொருட்டு வருங்காலத்தில் நடப்பனவற்றை எங்களுக்குக் கூறுங்கள்: நன்மையாவது தீமையாவது செய்யுங்கள்: நாங்கள் யாவரும் ஒன்றாகக்கண்டு திகைத்து நிற்போம். | ஏசா 42:9 ஏசா 44:7 ஏசா 44:8 ஏசா 45:8 ஏசா 46:9 ஏசா 46:10 யோவா 13:19 அப் 15:18 |
| 24 | இதோ, நீங்கள் ஒன்றுமில்லாமை! உங்கள் செயலும் ஒன்றுமில்லாமையே! உங்களைத் தேர்ந்துகொள்பவன் வெறுக்கத்தக்கவன்”. | ஏசா 41:29 ஏசா 44:9 ஏசா 44:10 சங் 115:8 எரே 10:8 எரே 10:14 எரே 51:17 எரே 51:18 1கொரி 8:4 |
| 25 | நான் வடக்கிலிருந்து ஒருவனை எழும்பச் செய்தேன்: அவன் கதிரவன் உதிக்கும் திசையிலிருந்து வந்துவிட்டான்: அவன் என் பெயரைப் போற்றுவான்: ஒருவன் சேற்றைக் குழைப்பதுபோலும் குயவன் களிமண்ணை மிதிப்பது போலும் அவன் ஆளுநர்களை நடத்துவான். | ஏசா 21:2 ஏசா 44:28 ஏசா 45:1-6 ஏசா 45:13-6 ஏசா 46:10 ஏசா 46:11 எரே 51:27-29 |
| 26 | நாங்கள் அறியும்படி தொடக்கத்திலிருந்தே இதை அறிவித்தவர் யார்? 'அது சரி' என்று நாங்கள் சொல்லும்முன்னரே உரைத்தவர் யார்? அப்படி எதுவும் அறிவிக்கவில்லை: முன்னுரைக்கவில்லை: நீங்கள் பேசியதை யாரும் கேட்டதுமில்லை. | ஏசா 41:22 ஏசா 43:9 ஏசா 44:7 ஏசா 45:21 ஆபகூ 2:18-20 |
| 27 | 27”இதோ வருகிறார்கள்” என்று முதன்முதலில் சீயோனுக்கு அறிவித்தது நானே! நற்செய்தியாளரை எருசலேமுக்கு அனுப்பியதும் நானே! | ஏசா 41:4 ஏசா 43:10 ஏசா 44:6 ஏசா 48:12 வெளிப் 2:8 |
| 28 | நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்: எதையும் காணவில்லை: அவற்றுள் அறிவுரை வழங்கவோ என் வினாவுக்கு மறுமொழி தரவோ எத்தெய்வமும் இல்லை. | ஏசா 63:5 தானி 2:10 தானி 2:11 தானி 4:7 தானி 4:8 தானி 5:8 |
| 29 | இதோ அவை அனைத்தும் ஒன்றுமில்லாமையே! அவற்றின் செயல்களும் ஒன்றுமில்லாமையே! அவற்றின் படிமங்களோ வெறும் காற்றும் வெறுமையுமே! | ஏசா 41:24 ஏசா 44:9-20 சங் 115:4-8 சங் 135:15-18 எரே 10:2-16 ஆபகூ 2:18 |