26
எசுரூபின் இறைவன்போல் எவருமில்லை: அவர் உனக்கு உதவிட வானங்களின் வழியாக தமது மாட்சியுடன் மேகங்கள்மீது ஏறிவருவார்.
27
என்றுமுள கடவுளே உனக்குப் புகலிடம்: என்றுமுள அவரது புயம் உனக்கு அடித்தளம்: பகைவரை உன் முன்னின்று விரட்டியடித்து, அவர்களை அழித்துவிடு” என்பார் அவர்.
28
அப்போது, இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழ்ந்திடும்: யாக்கோபின் உறைவிடம், தானியமும், இரசமும் மிகுந்த நிலத்தில் இருக்கும்: அவர்தம் மேகங்கள் பனி மழை பொழியும்.
29
இஸ்ரயேலே! நீ பேறு பெற்றவன்: ஆண்டவரால் மீட்கப்பட்ட மக்களினமே! உன்னைப்போல் வேறு இனம் உண்டோ? உன்னைக் காக்கும் கேடயமும் உன் வெற்றி வாளும் அவரே! உன் பகைவர் உன்முன் கூனிக்குறுகுவர்!