அதைத் தூக்கித் தோள்மேல் சுமந்து போகின்றனர்: அதற்குரிய இடத்தில் அதை நிலைநிறுத்தி வைக்கின்றனர்: அது அங்கேயே நிற்கிறது: தன் இடத்திலிருந்து அது பெயராது: எவன் அதனிடம் கூக்குரல் எழுப்பினாலும் அது மறுமொழி தராது: அவன் துயரத்திலிருந்து அவனை விடுவிப்பதுமில்லை.