ஆபகூக் 2:18-20 - WCV
18
சிற்பி செதுக்கிய சிலையாலும், வார்ப்படத்தில் வடித்தெடுத்த படிமத்தாலும் பயன் என்ன? அவை பொய்களின் பிறப்பிடமே! ஆயினும் சிற்பி தான் செதுக்கிய ஊமைச் சிலைகளாகிய கைவேலைகளிலே நம்பிக்கை வைக்கிறான்.
19
மரக்கட்டையிடம், “விழித்தெழும்” என்றும் ஊமைக் கல்லிடம் “எழுந்திரும்” என்றும் சொல்கிறவனுக்கு ஐயோ கேடு! அவை ஏதேனும் வெளிப்பாடு அருள முடியுமோ? பொன் வெள்ளியால் பொதியப்பட்டிருப்பினும் உள்ளே சிறிதளவும் உயிரில்லையே!
20
ஆனால் ஆண்டவர் தம் புனித கோவிலில் வீற்றிருக்கின்றார்: அவர் திருமுன் மண்ணுலகெங்கும் மௌனம் காப்பதாக.