அப்போஸ்தலர் 13:8-11 - WCV
8
எலிமா என்னும் மந்திரவாதி அவர்களை எதிர்த்து நின்று ஆட்சியாளர் நம்பிக்கை கொள்ளாதபடி அவரது கவனத்தைத் திருப்ப முயன்றான். - எலிமா என்றாரே மந்திரவாதி என்பது தான் பொருள்.
9
அப்போது பவுல் என்னும் சவுல் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவனை உற்றுப் பார்த்து,
10
10”அனைத்து வஞ்சகத்துக்கும் உறைவிடமானவனே, பழிபாவம் எதற்கும் அஞ்சாதவனே, அலகையின் மகனே, நீதி நேர்மை அனைத்துக்கும் பகைவனே, ஆண்டவரின் நேரிய வழியிலிருந்து திசைதிருப்புவதை நிறுத்தமாட்டாயோ!
11
இதோ, இப்போதே ஆண்டவரது தண்டனை உன்மேல் வரப்போகிறது. குறிப்பிட்ட காலம்வரை நீ பார்வையற்றவனாய் இருப்பாய்: கதிரவனைக் காணமாட்டாய் என்றார். உடனே அவன் பார்வை மங்கியது: இருள் சூழ்ந்தது. அவன் தன்னைக் கைப்பிடித்து நடத்துவதற்கு ஆள் தேடினான்.