சங்கீதம் 50:10-12 - WCV
10
ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள்: ஓராயிரம் குன்றுகளில் மேயும் கால்நடைகளும் என்னுடையவை.
11
குன்றத்துப் பறவை அனைத்தையும் நான் அறிவேன்: சமவெளியில் நடமாடும் யாவும் என்னுடையவை.
12
எனக்குப் பசியெடுத்தால் நான் உங்களைக் கேட்கப் போவதில்லை: ஏனெனில், உலகும் அதில் நிறைந்துள்ள யாவும் என்னுடையவையே.