89
ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு: விண்ணுலகைப்போல் அது நிலைத்துள்ளது.
90
தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை: நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர், அது நிலைபெற்றுள்ளது.
91
உம் ஒழுங்குமறைகளின் படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன. ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன.