2
அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார்.
3
“பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்” என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்.
4
இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:”பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்:
5
பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்: கோணலானவை நேராக்கப்படும்: கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.
6
மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்'.”