| 1 | அழித்தொழிப்பவனே, உனக்கு ஐயோ கேடு! நீ இன்னும் அழித்தொழிக்கப்படவில்லையே! நம்பிக்கைத் துரோகியே, உனக்கு எவரும் துரோகம் செய்யவில்லையா! நீ அழித்தொழிப்பதை முடித்ததும், நீயும் அழிந்தொழிவாய்: நீ நம்பிக்கைத் துரோகம் செய்தவுடன், உனக்கும் துரோகம் செய்வார்கள். | ஏசா 10:5 ஏசா 10:6 ஏசா 17:14 ஏசா 24:16 2இரா 18:13-17 2நாளா 28:16-21 ஆபகூ 2:5-8 |
| 2 | ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாய் இரும்: நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம்: அதிகாலைதோறும் எங்களைக் காக்கும் கரமாகவும், துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும் இருப்பீராக! | ஏசா 25:9 ஏசா 26:8 ஏசா 30:18 ஏசா 30:19 சங் 27:13 சங் 27:14 சங் 62:1 சங் 62:5 சங் 62:8 சங் 123:2 சங் 130:4-8 புலம் 3:25 புலம் 3:26 ஓசி 14:2 |
| 3 | ஆரவராப் பேரொலி கேட்க மக்களினங்கள் பின்வாங்கி ஓடுகின்றன: நீர் கிளர்ந்தெழும்போது வேற்றினத்தார் சிதறுண்டு போகின்றனர். | ஏசா 10:13 ஏசா 10:14 ஏசா 10:32-34 ஏசா 17:12-14 ஏசா 37:11-18 ஏசா 37:29-36 சங் 46:6 |
| 4 | பச்சைப் புழுக்கள் சேர்ப்பதுபோல் கொள்ளைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. வெட்டுக்கிளிகள் பாய்வதுபோல் அவற்றின்மேல் மனிதர் பாய்கின்றனர். | ஏசா 33:23 2இரா 7:15 2இரா 7:16 2நாளா 14:13 2நாளா 20:25 |
| 5 | ஆண்டவர் மாட்சிக்கு உரியவர்: ஏனெனில் அவர் உன்னதத்தில் உறைகின்றார்: சீயோனை அவர் நீதியாலும் நேர்மையாலும் நிரப்புகின்றார்: | ஏசா 33:10 ஏசா 2:11 ஏசா 2:17 ஏசா 12:4 ஏசா 37:20 யாத் 9:16 யாத் 9:17 யாத் 15:1 யாத் 15:6 யாத் 18:11 யோபு 40:9-14 சங் 21:11-13 சங் 46:9 சங் 46:10 சங் 97:8 சங் 97:9 சங் 115:1 சங் 115:2 சங் 118:16 தானி 4:37 ரோம 3:26 வெளிப் 19:2-6 |
| 6 | உங்கள் காலத்தில் அவரே பாதுகாப்பாய் இருப்பார்: அவர் உங்களுக்கு முழு விடுதலை வழங்கி ஞானத்தையும் அறிவாற்றலையும் நல்குவார். ஆண்டவரைப்பற்றிய அச்சமே அவர்களது அரும்செல்வம். | ஏசா 11:2-5 ஏசா 38:5 ஏசா 38:6 2நாளா 32:27-29 சங் 45:4 நீதி 14:27 நீதி 24:3-7 நீதி 28:2 நீதி 28:15 நீதி 28:16 நீதி 29:4 பிரச 7:12 பிரச 7:19 பிரச 9:14-18 எரே 22:15-17 |
| 7 | இதோ! வலிமைமிக்க அவர்களுடைய வீரர்கள் வீதியில் நின்று கதறியழுகின்றனர்: சமாதானத்தின் தூதர் மனங்கசந்து அழுகின்றனர். | ஏசா 36:3 ஏசா 36:22 2இரா 18:18 2இரா 18:37 2இரா 19:1-3 |
| 8 | நெடுஞ்சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லை: வழிப்பயணிகள் கடந்து செல்வதும் இல்லை: உடன்படிக்கை முறிக்கப்படுகின்றது: ஒப்பந்தம் மீறப்படுகின்றது: மனிதருக்கு மரியாதையே கிடையாது. | ஏசா 10:29-31 நியா 5:6 புலம் 1:4 |
| 9 | நாடு புலம்பியழுது சோர்ந்து போகின்றது: லெபனோன் வெட்கி நாணித் தளர்ச்சியடைகின்றது: சாரோன் பாலைநிலம்போல் ஆகின்றது: பாசானும் கர்மேலும் இலையுதிர்க்கின்றன. | ஏசா 1:7 ஏசா 1:8 ஏசா 24:1 ஏசா 24:4-6 ஏசா 24:19-6 ஏசா 24:20-6 எரே 4:20-26 |
| 10 | ஆண்டவர் கூறுகின்றார்: இப்பொழுது நான் எழுந்தருள்வேன்: இப்பொழுது என்னை உயர்த்திக் கொள்வேன்: இப்பொழுது என்னை மாட்சிமைப் படுத்துவேன். | ஏசா 10:16 ஏசா 10:33 ஏசா 42:13 ஏசா 42:14 ஏசா 59:16 ஏசா 59:17 உபா 32:36-43 சங் 12:5 சங் 78:65 சங் 102:13-18 செப் 3:8 |
| 11 | நீங்கள் பதரைக் கருத்தாங்கி, வைக்கோலைப் பெற்றெடுத்தீர்கள்: உங்கள் உயிர்மூச்சு நெருப்பாகி உங்களையே எரித்துவிடும். | ஏசா 8:9 ஏசா 8:10 ஏசா 10:7-14 ஏசா 17:13 ஏசா 29:5-8 ஏசா 59:4 யோபு 15:35 சங் 2:1 சங் 7:14 சங் 83:5-18 அப் 5:4 யாக் 1:15 |
| 12 | சுண்ணாம்பு நீற்றப்படுவதைப் போல் மக்களினங்கள் பொசுக்கப்படுவார்கள்: முட்கள்போல் வெட்டுண்டு நெருப்புக்கு இரையாவார்கள். | ஆமோ 2:1 |
| 13 | தொலையில் உள்ளோரே, நான்செய்வதைக் கேளுங்கள்: அருகில் உள்ளோரே, என் ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள். | ஏசா 18:3 ஏசா 37:20 ஏசா 49:1 ஏசா 57:19 யாத் 15:14 யோசு 2:9-11 யோசு 9:9 யோசு 9:10 1சாமு 17:46 சங் 46:6-11 சங் 48:10 சங் 98:1 சங் 98:2 தானி 3:27-30 தானி 4:1-3 தானி 6:25-27 அப் 2:5-11 எபே 2:11-18 |
| 14 | சீயோன்வாழ் பாவிகள் அஞ்சுகின்றனர்: இறைப்பற்றில்லாரைத் திகில் ஆட்கொள்கின்றது. சுட்டிடெரிக்கும் நெருப்பில் நம்மில் எவர் தங்குவார்? என்றென்றும் பற்றியெரியும் தழலில் நம்மில் எவர் இருப்பார்? | ஏசா 7:2 ஏசா 28:14 ஏசா 28:15 ஏசா 28:17-22 ஏசா 29:13 ஏசா 30:8-11 எண் 17:12 எண் 17:13 யோபு 15:21 யோபு 15:22 யோபு 18:11 சங் 53:5 நீதி 28:1 வெளிப் 6:15-17 |
| 15 | நீதிநெறியில் நடப்பவர், நேர்மையானவற்றைப் பேசுபவர். கொடுமைசெய்து பெற்ற வருவாயை வெறுப்பவர், கையூட்டு வாங்கக் கை நீட்டாதவர், இரத்தப் பழிச் செய்திகளைச் செவி கொடுத்துக் கேளாதவர், தீயவற்றைக் கண்கொண்டு காணாதவர்: | ஏசா 56:1 ஏசா 56:2 சங் 1:1-3 சங் 15:1 சங் 15:2 சங் 24:4 சங் 24:5 சங் 26:1 சங் 26:2 சங் 106:3 எசே 18:15-17 மல்கி 2:6 லூக் 1:6 ரோம 2:7 தீத் 2:11 தீத் 2:12 1யோவா 3:7 |
| 16 | அவர்களே உன்னதங்களில் வாழ்வர்: கற்பாறைக் கோட்டைகள் அவர்களது காவல்அரண் ஆகும்: அவர்களுக்கு உணவு வழங்கப்படும்: தண்ணீர் தரப்படுவதும் உறுதி. | ஏசா 32:18 சங் 15:1 சங் 90:1 சங் 91:1-10 சங் 91:14-10 சங் 107:41 நீதி 1:33 நீதி 18:10 ஆபகூ 3:19 |
| 17 | அரசரை உங்கள் கண்கள் அழகுமிக்கவராகக் காணும்: பரந்து விரிந்த நாட்டை நீங்கள் காண்பீர்கள்: | ஏசா 32:1 ஏசா 32:2 ஏசா 37:1 2நாளா 32:23 சங் 45:2 உன்ன 5:10 சகரி 9:17 மத் 17:2 யோவா 1:14 யோவா 14:21 யோவா 17:24 1யோவா 3:2 |
| 18 | திகிலைப்பற்றி உங்கள் மனம் இவ்வாறு சிந்திக்கும்: “குடிக்கணக்குச் செய்தவன் எங்கே? திறைப்பொருளை நிறுத்துப் பார்த்தவன் எங்கே? கோபுரங்களை எண்ணிக்கை இட்டவன் எங்கே? | ஏசா 38:9-22 1சாமு 25:33-36 1சாமு 30:6 சங் 31:7 சங் 31:8 சங் 31:22 சங் 71:20 2கொரி 1:8-10 2தீமோ 3:11 |
| 19 | உங்களுக்கு விளங்காத குளறுபடியான பேச்சையும் புரியாத வேற்றுமொழியையும் கொண்ட காட்டுமிராண்டி மக்களை நீங்கள் மீண்டும் காணமாட்டீர்கள். | யாத் 14:13 உபா 28:49 உபா 28:50 2இரா 19:32 |
| 20 | நம் விழாக்களின் நகரான சீயோனைப் பார்: அமைதியின் இல்லமாகவும், பெயர்க்கப்படாத முளைகளும் அறுபடாத கயிறுகளும் கொண்ட அசைக்க முடியாத கூடாரமாகவும் எருசலேம் இருப்பதை உங்கள் கண்கள் காணும். | சங் 48:12 சங் 48:13 |
| 21 | ஏனெனில், அங்கே ஆண்டவர் நமக்கெனத் தம் மாட்சியை விளங்கச் செய்வார்: அது அகன்ற ஆறுகளையும் விரிந்த நீரோடைகளையும் உடைய இடம் போன்றது: துடுப்புப் படகு அங்குப் போவதில்லை: மாபெரும் கப்பல் கடந்து வருவதும் இல்லை. | சங் 29:3 அப் 7:2 2கொரி 4:4-6 |
| 22 | ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்: ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்: ஆண்டவரே நமக்கு வேந்தர்: அவரே நமக்கு மீட்பு அளிப்பவர். | ஆதி 18:25 சங் 50:6 சங் 75:7 சங் 98:9 2கொரி 5:10 |
| 23 | உங்கள் வடக்கயிறுகள் தளர்ந்து தொங்கும்: அவற்றால் பாய் மரத்தை நிலையாய்ப் பிடிக்க இயலாது: பாய் விரிக்கவும் முடியாது: அப்பொழுது திரளான கொள்ளைப் பொருள் பங்கிடப்படும்: முடவரும் கொள்ளைப் பொருளைச் சூறையாடுவர். | ஏசா 33:21 எசே 27:26-34 அப் 27:19 அப் 27:30-32 அப் 27:40-32 அப் 27:41-32 |
| 24 | சீயோனில் வாழ்பவர் எவரும் “நான் நோயாளி” என்று சொல்லமாட்டார். அதில் குடியிருக்கும் மக்களின் தீச்செயல் மன்னிக்கப்படும். | ஏசா 58:8 யாத் 15:26 உபா 7:15 உபா 28:27 2நாளா 30:20 எரே 33:6-8 யாக் 5:14 வெளிப் 21:4 வெளிப் 22:2 |