8
இப்பொழுது நீ சென்று அவர்கள் முன் பலகையில் பதித்து வை: ஏட்டுச்சுருள் ஒன்றில் எழுதிவை: வருங்காலத்திற்கென என்றுமுள சான்றாக அது விளங்கும்.
9
ஏனெனில், அவர்கள் கலகம் செய்யும் மக்களாயும் பொய்யுரைக்கும் பிள்ளைகளாயும், ஆண்டவரின் திருச்சட்டத்திற்குச் செவிசாய்ப்பதை விரும்பாத பிள்ளைகளாயும் உள்ளனர்.
10
திருப்பார்வையாளரிடம் அவர்கள் “திருப்பார்வை காண வேண்டாம்” என்றும், திருக்காட்சியாளரிடம், “எங்களுக்கென உண்மையானவற்றைக் காட்சி காணவேண்டாம்: இனிமையானவற்றை எங்களுக்குக் கூறுங்கள்: மாயமானவற்றையே கண்டு சொல்லுங்கள்:
11
தடம் மாறிச் செல்லுங்கள்: நெறியை விட்டு விலகுங்கள்: இஸ்ரயேலின் தூயவரை எங்கள் பார்வையிலிருந்து அகற்றுங்கள்” என்கிறார்கள்.