2நாளாகமம் 28:16-21 - WCV
16
பின்னர், அரசன் ஆகாசு அசீரிய அரசனுக்குத் தூதனுப்பி, தனக்கு உதவும்படி வேண்டினான்.
17
ஏனெனில் மீண்டும் ஏதோமியர் வந்து யூதாவை முறியடித்துப் பலரைச் சிறைப்பிடித்துச் சென்றனர்.
18
பெலிஸ்தியர் யூதாவின் சமவெளி நகர்களுக்கும் தென்பகுதிக்கும் எதிராக எழுந்து, பெத்சமேசு, அய்யலோன், கெதெரோத்து ஆகியவற்றையும், சோக்கோவையும் அதன் சிற்றூர்களையும் திம்னாவையும் அதன் சிற்றூர்களையும், கிம்சோவையும் அதன் சிற்றூர்களையும் கைப்பற்றி அங்கே குடியேறினர்.
19
அரசன் ஆகாசு யூதாவின் ஒழுக்கத்தைச் சீர்குலைத்ததாலும், ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததாலும், ஆண்டவர் யூதாவைச் சிறுமைப்டுத்தினார்.
20
பின்னர் அசீரிய மன்னன் தில்கத்பில்னேசர் அவனுக்கு உதவி செய்யாமல் நெருக்கடியையே உண்டாக்கினான்.
21
ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும், அரண்மனையிலும், தலைவர்களிடமும் இருந்த செல்வத்தை எடுத்து, அசீரிய மன்னனுக்கு அளித்திருந்தும் அதனால் ஒரு உதவியும் கிடைக்கவில்லை.