ஏசாயா 17:12-14 - WCV
12
ஐயோ! மக்களினங்கள் பலவற்றின் ஆரவாரம் கேட்கிறது: கடல் கொந்தளிப்பதுபோல் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்: இதோ, மக்கள் கூட்டத்தின் கர்ச்சனைக்குரல் கேட்கிறது: வெள்ளப்பெருக்கின் இரைச்சலைப் போல் அவர்கள் முழங்குகிறார்கள்.
13
பெருவெள்ளம்போல் மக்கள் கூட்டத்தினர் கர்ச்சிக்கிறார்கள்: அவர்களை ஆண்டவர் அதட்டுவார்: அவர்களும் வெகுதொலைவிற்கு ஓடிப் போவார்கள்: மலைகளில் காற்றின் முன் அகப்பட்ட பதர் போன்றும், புயல்காற்று முன் சிக்குண்ட புழுதி போன்றும் துரத்தப்படுவார்கள்.
14
மாலைவேளையில், இதோ! எங்கும் திகில்: விடிவதற்குள் அவர்கள் இல்லாதொழிவார்கள்: இதுவன்றோ நம்மைக் கொள்ளையடிப்பவர்கள் பங்கு! இதுவன்றோ நம்மைச் சூறையாடுவோரின் நிலைமை.