ஏசாயா 10:32-34 - WCV
32
இன்றே அப்பகைவன் நோபு நகரில் தங்குவான்: அங்கிருந்து மகள் சீயோனின் மலைக்கும் எருசலேமின் குன்றிற்கும் எதிராகக் கையை ஓங்கி அசைப்பான்.
33
நம் தலைவராகிய படைகளின் ஆண்டவர் அச்சுறுத்தும் ஆற்றலால், கிளைகளை வெட்டி வீழ்த்துவார்: உயர்ந்தவற்றின் கிளைகள் துண்டிக்கப்படும்: செருக்குற்றவை தாழ்த்தப்படும்: நிமிர்ந்து நிற்பவை தரைமட்டமாக்கப்படும்.
34
அடர்ந்த காட்டை அவர் கோடரியால் வெட்டி வீழ்த்துவார்: லெபனோன் தன் உயர்ந்த மரங்களுடன் தரையிலே சாயும்.