3
ஞானம் வீட்டைக் கட்டும்: மெய்யறிவு அதை உறுதியாக அமைக்கும்.
4
அருமையும் நேர்த்தியுமான பல பொருள்களால் அறிவு தன் அறைகளை நிரப்பும்.
5
வீரரைவிட ஞானமுள்ளவரே வலிமை மிக்கவர்: வலிமை வாய்ந்த வரைவிட அறிவுள்ளவரே மேம்பட்டவர்.
6
ஏனெனில், போரில் வெற்றி பெற ஆழ்ந்த சிந்தனை தேவை: கவனத்துடன் வகுக்கும் திட்டமே வெற்றிக்கு அடிப்படை.
7
ஞானம் மூடருடைய அறிவெல்லைக்கு அப்பாற்பட்டது: எனவே, அவர் வழக்குமன்றத்தில் வாய் திறக்கமாட்டார்.