| 1 | இதோ, ஓர் அரசர் நேர்மையுடன் அரசாள்வார்: தலைவர்களும் நீதியோடு ஆட்சி செய்வர்: | ஏசா 9:6 ஏசா 9:7 ஏசா 40:1-5 2சாமு 23:3 2நாளா 31:20 2நாளா 31:21 சங் 45:1 சங் 45:6 சங் 45:7 சங் 72:1 சங் 72:2 சங் 99:4 எரே 23:5 எரே 23:6 எரே 33:15 ஓசி 3:5 சகரி 9:9 ரோம 5:21 எபிரெ 1:8 எபிரெ 1:9 வெளிப் 19:11 |
| 2 | ஒவ்வொருவரும் காற்றுக்கு ஒதுங்கிடமாகவும் புயலுக்குப் புகலிடமாகவும் வறண்ட நிலத்தில் நீருள்ள கால்வாய் போலும் காய்ந்த மண்ணில் பெரும் குன்றின் நிழல் போலும் இருப்பர். | ஏசா 7:14 ஏசா 8:10-14 ஏசா 9:6 சங் 146:3-5 மீகா 5:4 மீகா 5:5 சகரி 13:7 1தீமோ 3:16 |
| 3 | அப்பொழுது பார்வை உடையவரின் கண்கள் மறைக்கபட்டிரா. கேள்வியுடையவரின் செவிகள் அடைக்கப்பட்டிரா. | ஏசா 29:18 ஏசா 29:24 ஏசா 30:26 ஏசா 35:5 ஏசா 35:6 ஏசா 54:13 ஏசா 60:1 ஏசா 60:2 எரே 31:34 மத் 13:11 மாற் 7:37 மாற் 8:22-25 அப் 26:18 2கொரி 4:6 1யோவா 2:20 1யோவா 2:21 |
| 4 | பதறும் நெஞ்சங்கள் அறிவை உணர்ந்துகொள்ளும்: திக்குவாயரின் வாய் தயக்கமின்றித் தெளிவுடன் பேசும். | ஏசா 29:24 நெகே 8:8-12 மத் 11:25 மத் 16:17 அப் 6:7 அப் 26:9-11 கலா 1:23 |
| 5 | மூடர் இனிச் சான்றோர் என அழைக்கப்படார்: கயவர் இனிப் பெரியோர் எனக்கருதப்படார்: | ஏசா 5:20 சங் 15:4 மல்கி 3:18 |
| 6 | ஏனெனில், மூடர் மடமையாய்ப் பேகுகின்றனர்: அவர்களின் மனம் தீமை செய்யத் திட்டமிடும்: அவர்களின் சிந்தை இறைப்பற்றின்றித் தீச்செயல் செய்வதையே நாடும்: அவர்கள் ஆண்டவரைப்பற்றித் தவறாகவே பேசுவர்: பசித்தோரின் பசி போக்கமாட்டார்: தாகமுற்றோர்க்கு நீர் தர மறுப்பார். | 1சாமு 24:13 1சாமு 25:10 1சாமு 25:11 எரே 13:23 மத் 12:34-36 மத் 15:19 யாக் 3:5 யாக் 3:6 |
| 7 | கயவரின் நயவஞ்சகச் செயல்கள் தீமையானவை: வறியோர் வழக்கில் நீதி இருப்பினும், வஞ்சக வார்த்தைகளால் ஏழைகளை அழிக்கும் தீங்கானவற்றை அவர்கள் திட்டமிடுகின்றனர். | ஏசா 1:23 ஏசா 5:23 எரே 5:26-28 மீகா 2:11 மீகா 7:3 மத் 26:14-16 மத் 26:59-16 மத் 26:60-16 |
| 8 | சான்றோர் உயர்வானவற்றைச் சிந்திக்கின்றனர்: அவர்கள் சான்றாண்மையில் நிலைத்து நிற்பர். | 2சாமு 9:1-13 யோபு 31:16-21 சங் 112:9 நீதி 11:24 லூக் 6:33-35 அப் 9:39 அப் 11:29 அப் 11:30 2கொரி 8:2 2கொரி 9:6-11 |
| 9 | பகட்டாக வாழும் பெண்களே, எழுந்து என் குரலுக்குச் செவிகொடுங்கள்: கவலையற்ற புதல்வியரே, என் வார்த்தையைக் கேளுங்கள். | ஏசா 3:16 ஏசா 47:7 ஏசா 47:8 உபா 28:56 எரே 6:2-6 எரே 48:11 எரே 48:12 புலம் 4:5 ஆமோ 6:1-6 |
| 10 | கவலையற்ற பெண்களே, ஓராண்டும் சில நாள்களும் சென்றபின் நீங்கள் நடுநடுங்குவீர்கள். ஏனெனில் திராட்சை அறுவடை அற்றுப்போகும்: கனிகொய்யுங் காலம் இனி வராது. | ஏசா 3:17-26 ஏசா 24:7-12 எரே 25:10 எரே 25:11 ஓசி 3:4 |
| 11 | பகட்டாக வாழும் மங்கையரே, அஞ்சி நடுங்குங்கள்: கவலையற்ற மகளிரே, நடுநடுங்குங்கள்: உடைகளை உரிந்து, களைந்து இடையில் சாக்கு உடையைக் கட்டிக் கொள்ளுங்கள். | ஏசா 2:19 ஏசா 2:21 ஏசா 22:4 ஏசா 22:5 ஏசா 33:14 லூக் 23:27-30 யாக் 5:5 |
| 12 | செழுமையான வயல்களைக் குறித்தும் வளமான திராட்சைத் தோட்டத்தை முன்னிட்டும் மாரடித்து ஓலமிட்டு அழுங்கள். | புலம் 2:11 புலம் 4:3 புலம் 4:4 |
| 13 | முட்களும் முட்புதர்களும் ஓங்கி வளர்ந்துள்ள என் மக்களின் நிலத்திற்காகவும் களிப்புமிகு நகரில் உள்ள மகிழ்ச்சி நிறை இல்லங்கள் அனைத்திற்காகவும் அழுங்கள். | ஏசா 6:11 ஏசா 7:23 ஏசா 34:13 சங் 107:34 ஓசி 9:6 ஓசி 10:8 |
| 14 | அரண்மனை பாழடையுமாறு விடப்படும்: ஆரவாரமிக்க நகர் வெறுமையாகும்: குன்றும் காவல் மாடமும் என்றுமுள குகைகளாகும்: அங்குக் காட்டுக் கழுதைகள் களிப்படையும்: மந்தைகள் மேயும். | ஏசா 5:9 ஏசா 24:1-3 ஏசா 24:10-3 ஏசா 24:12-3 ஏசா 25:2 ஏசா 27:10 2இரா 25:9 லூக் 21:20 லூக் 21:24 |
| 15 | மீண்டும் உன்னதத்திலிருந்து ஆவி நம்மேல் பொழியப்படும்: பாலைநிலம் செழுமையான தோட்டமாகும்: செழுமையான தோட்டம் அடர்ந்த காடாகத் தோன்றும். | ஏசா 11:2 ஏசா 11:3 ஏசா 44:3 ஏசா 45:8 ஏசா 59:19-21 ஏசா 63:11 சங் 104:30 சங் 107:33 நீதி 1:23 எசே 39:29 யோவே 2:28 யோவே 2:29 சகரி 12:10 லூக் 24:49 யோவா 7:39 அப் 2:17 அப் 2:18 அப் 2:33 2கொரி 3:8 தீத் 3:5 தீத் 3:6 |
| 16 | நீதி பாலைநிலத்தில் குடிகொண்டிருக்கும்: நேர்மை வளமான வயல்களில் வாழும். | ஏசா 35:8 ஏசா 42:4 ஏசா 56:6-8 ஏசா 60:21 சங் 94:14 சங் 94:15 ஓசி 3:5 1கொரி 6:9-11 தீத் 2:11 தீத் 2:12 1பேது 2:9-12 1பேது 4:1-4 |
| 17 | நேர்மையால் வரும் பயன் நல்வாழ்வு: நீதியால் விளைவன என்றுமுள அமைதியும் நம்பிக்கையும். | ஏசா 26:3 ஏசா 48:18 ஏசா 54:13 ஏசா 54:14 ஏசா 55:12 ஏசா 57:19 ஏசா 66:12 சங் 72:2 சங் 72:3 சங் 85:8 சங் 119:165 ரோம 14:17 பிலிப் 4:6-9 யாக் 3:17 யாக் 3:18 |
| 18 | என் மக்கள் அமைதி சூழ் வீடுகளிலும் பாதுகாப்பான கூடாரங்களிலும் தொல்லையற்ற தங்குமிடங்களிலும் குடியிருப்பர். | ஏசா 33:20-22 ஏசா 35:9 ஏசா 35:10 ஏசா 60:17 ஏசா 60:18 எரே 23:5 எரே 23:6 எரே 33:16 எசே 34:25 எசே 34:26 ஓசி 2:18-23 சகரி 2:5 சகரி 2:8 எபிரெ 4:9 1யோவா 4:16 |
| 19 | ஆனால், காடு அழியக் கல்மழை பொழியும்: நகரம் தாழ்நிலை அடைவது உறுதி. | ஏசா 25:4 ஏசா 28:2 ஏசா 28:17 ஏசா 30:30 ஏசா 37:24 யாத் 9:18-26 எசே 13:11-13 மத் 7:25 வெளிப் 8:7 |
| 20 | நீர்வளமிக்க இடங்களில் எல்லாம் பயிர்செய்து தாராளமாக மேயுமாறு, மாட்டையும் கழுதையையும் அவிழ்த்துவிடும் நீங்கள் நற்பேறு பெற்றவர்கள். | ஏசா 19:5-7 ஏசா 30:23 ஏசா 55:10 ஏசா 55:11 பிரச 11:1 அப் 2:41 அப் 4:4 அப் 5:14 1கொரி 3:6 யாக் 3:18 |