26
ஏனெனில், என் மக்களிடையே தீயோர் காணப்படுகின்றனர்: வேடர் பதுங்கியிருப்பதுபோல் அவர்கள் மறைந்து கண்ணி வைத்து மனிதர்களைப் பிடிக்கின்றனர்.
27
பறவைகளால் கூண்டு நிறைந்திருப்பது போல, அவர்களின் வீடுகள் சூழ்ச்சிவழி கிடைத்த பொருள்களினால் நிறைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் பெரியவர்களும் செல்வர்களும் ஆனார்கள்.
28
அவர்கள் கொழுத்துத் தளதள வென்றிருக்கின்றார்கள்: அவர்களின் தீச்செயல்களுக்குக் கணக்கில்லை: வழக்குகளை நீதியுடன் விசாரிப்பதில்லை: அனாதைகள் வளம்பெறும் வகையில் அவர்கள் வழக்கை விசாரிப்பதில்லை. ஏழைகளின் உரிமைகளை நிலைநாட்டுவதுமில்லை.