18
அந்நாளில், காட்டு விலங்குகளோடும், வானத்துப் பறவைகளோடும், நிலத்தில் ஊர்வனவற்றோடும் அவர்களுக்காக நான் ஓர் உடன்படிக்கை செய்வேன்: வில்லையும் வாளையும் போரையும் நாட்டினின்று அகற்றிவிடுவேன்: அச்சமின்றி அவர்கள் படுத்திருக்கச் செய்வேன்.
19
“இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்: நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்.
20
மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்: ஆண்டவராம் என்னை நீயும் அறிந்துகொள்வாய்.
21
மேலும் அந்நாளில் நான் மறுமொழி அளிப்பேன்” என்கிறார் ஆண்டவர். “நான் வானத்தின் வழியாய் மறுமொழி அளிப்பேன்: அது நிலத்தின் வழியாய் மறுமொழி தரும்.
22
நிலம், கோதுமை, திராட்சை இரசம், எண்ணெய் வழியாய் மறுமொழி தரும். அவை இஸ்ரியேல்வழியாய் மறுமொழி தரும்” என்கிறார் ஆண்டவர்.
23
நான் அவனை எனக்கென்று நிலத்தில் விதைப்பேன், “லோ ருகாமா” வுக்குக் கருணை காட்டுவேன்: “லோ அம்மீ” யை நோக்கி, “நீங்கள் என் மக்கள்” என்பேன்: அவனும் “நீரே என் கடவுள்” என்பான்.