இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 31

                   
புத்தகங்களைக் காட்டு
1துணை வேண்டி எகிப்துக்குச் செல்வோருக்கு ஐயோ கேடு! அவர்கள் குதிரைகளுக்காகக் காத்துக் கிடக்கின்றர்: பெரும் தேர்ப்படைகளையும் வலிமைமிகு குதிரை வீரர்களையும் நம்பியிருக்கிறார்கள்: இஸ்ரயேலின் தூயவருக்காக ஆவலுடன் காத்திருக்கவில்லை: ஆண்டவரைத் தேடுவதுமில்லை:ஏசா 30:1-7 ஏசா 36:6 ஏசா 57:9 எசே 17:15 ஓசி 11:5
2ஆனால் அவரோ ஞானமுடையவர்: தீங்கை வருவிப்பவர்: தம் வார்த்தைகளின் இலக்கை மாற்றாதவர்: தீயோர் வீட்டார்க்கும் கொடியவருக்கு உதவுவோருக்கும் எதிராகக் கிளர்ந்தெழுபவர்.1சாமு 2:3 யோபு 5:13 எரே 10:7 எரே 10:12 1கொரி 1:21-29 யூதா 1:25
3எகிப்தியர் வெறும் மனிதரே, இறைவன் அல்ல: அவர்கள் குதிரைகள் வெறும் தசைப்பிண்டங்களே, ஆவிகள் அல்ல: ஆண்டவர் தம் கையை ஓங்கும் போது உதவி செய்பவன் இடறுவான்: உதவி பெறுபவன் வீழ்வான்: அவர்கள் அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர்.ஏசா 36:6 உபா 32:30 உபா 32:31 சங் 9:20 சங் 146:3-5 எசே 28:9 அப் 12:22 அப் 12:23 2தெச 2:4-8
4ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: சிங்கமோ இளஞ்சிங்கமோ தன் இரைமேல் பாய்ந்து கர்ச்சிக்கும் போது மேய்ப்பர் கூட்டம் தனக்கெதிராய் எழுப்பும் கூக்குரலால் திகிலடைவதில்லை: அவர்கள் ஆரவாரத்தைப் பொருட்படுத்துவதில்லை. அதுபோல் படைகளின் ஆண்டவர் சீயோன் மலைமேலும் அதன் குன்றின்மேலும் போர்புரிய இறங்கி வருவார்.எண் 24:8 எண் 24:9 எரே 50:44 ஓசி 11:10 ஆமோ 3:8 வெளிப் 5:5
5பறக்கும் பறவைகள் போல் படைகளின் ஆண்டவர் எருசலேமுக்குப் பாதுகாப்பாய் இருப்பார்: அதைப் பாதுகாத்து விடுவிப்பார்: தண்டிக்காமல் தப்புவிப்பார்.ஏசா 10:14 யாத் 19:4 உபா 32:11 சங் 46:5 சங் 91:4
6இஸ்ரயேல் மக்களே! எனக்கெதிராகக் கலகம் செய்வதில் ஆழ்ந்துவிட்டீர்கள்: என்னிடம் திரும்பி வாருங்கள்.ஏசா 55:7 எரே 3:10 எரே 3:14 எரே 3:22 எரே 31:18-20 ஓசி 14:1-3 யோவே 2:12 யோவே 2:13 அப் 3:19 அப் 26:20
7அந்நாளில் உங்களுள் ஒவ்வொருவரும் தமக்குப் பாவத்தை விளைவித்துக் கொள்ளுமாறு செய்த பொன், வெள்ளிச் சிலைகளைத் தூக்கி எறிந்து விடுவார்.ஏசா 2:20 ஏசா 30:22 உபா 7:25 எசே 36:25 ஓசி 14:8
8“அசீரியன் வாளால் வீழ்வான்: ஆனால் மனிதரின் வாளாலன்று: அவனை வாள் விழுங்கிவிடும்: ஆனால் அது மனிதரின் வாளன்று: அவன் வாள் கண்டு, தப்பி ஓடுவான்: அவனுடைய இளங்காளையர் அடிமையாக்கப்படுவர்.ஏசா 10:16-19 ஏசா 10:33-19 ஏசா 10:34-19 ஏசா 14:25 ஏசா 29:5 ஏசா 30:27-33 ஏசா 37:35 2இரா 19:34-37 2நாளா 32:21 ஓசி 1:7
9அவன் பாறை திகிலுற்று ஓடிப்போகும்: அவன் தலைவர் கலக்கமுற்று ஓடுவர்” என்கிறார், சீயோனில் தீப்பிழம்பையும் எருசலேமில் தீச்சூளையையும் கொண்ட ஆண்டவர்.ஏசா 11:10 ஏசா 18:3
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.